Sunday, 24 November 2024

சிறுவர் மலர்

மலரிதழில் மகரந்த இழையில்

மதுவருந்தும் பட்டாம்பூச்சி

நாம் தொட்டவுடன்

எம் விரல் பட்டவுடன்

அந்தரத்தில் வட்டடமடிக்குமே!


அதுபோல பள்ளிப்பூங்காவில்

வகுப்பெனும் மலரில்

அறிவெனும் மதுவருந்தும்

பட்டாம் பூச்சிகள் எம்மை

விளையாட்டு தொட்டவுடன்

விழாவெனும் விரல் பட்டவுடன்

ஆனந்த அந்தரத்தில்

வட்டமடிப்போமே!


சிறுவர்தம் சிரிப்பொலி

இல்லாத இடங்கள்

என்றும் சிறைக்கூடங்களே!


சிறுவர்தம் செருப்பொலி

இல்லாத இடங்கள் 

என்றும் மயானக்காடுகளே!


சிறுவர்தம் சிறப்பறிந்த வள்ளுவன்

சிறுவர்தம் சிரிப்பொலிதனை கேளுங்கள்

செயற்கையாய் செய்த இன்னிசைகள்

எத்திசையில் ஓடி ஒளிக்கும் என்றறவீர்கள்

எனக்கூறி குறள் செய்தான்


சிறாருக்கு சீரிரக்கம் 

காட்டாதவர் யாரும்

என்னைச் சாராதவர்

என்றே அண்ணலார்

எச்சரித்தார் - அன்பை

அவருதட்டில் உச்சரித்தார்


யாவரும் எம்மீது அன்பு கொள்ள

சிறுவர் நாம் சிறாராய் இருப்போம்

விழுமியக்கல்வியால் சிறப்போம்

முனிவு காட்டாது கனிவு காட்டும்

மூத்தோரை மதிப்போம்

முழுவுலகின் இறைவனை துதிப்போம்


No comments:

Post a Comment