பண்பாட்டை மண்போட்டு மூடிவிட்டு
விண்போற்றும் விஞ்ஞானம் தன்பாட்டில்
தறிகெட்டுப் போகுதே?
புண்பட்டட நெஞ்சில் புளிவிட்டு
வதைப்பது போல் கண்பட்ட
இடமெல்லாம் கல்விட்டெறிந்த
காலம் போய்
கண்டம்விட்டு கண்டம் பாயும்
எறிகணைகளை விட்டெறியும்
தியாலம் இதுவோ?
பயிர் காக்க சட்டம்
உயிர் போக்க திட்டம்
மயிர் வளர்க்க பாடத்திட்டம்
உயிர் தாக்க படைக் கோட்டம்
உரிமைகள் விருத்தி கண்ட
விஞ்ஞான யுகமிங்கே!!
மாநாடுகளில் மட்டும் மனித உரிமை
உலக நாடுகளில் சடலவெளிகள்
அரங்குகளில் அடிப்படை உரிமை
ஆங்காங்கே அராஜகங்களின் ராஜாங்கம்
வட்ட மேசைகளில் வாழும் உரிமை
வன்புணர்வோருக்கே வட்டமுண்டு
இது என்ன கொடுமை?
பேச்சுரிமை வாக்குரிமையென
உரிமைப் பட்டடியல்
வானுயரைத் தொடும் - ஆனாலும்
அடியாளும் தடியாலும் அடித்ததில்
சடலங்கள் வடிகாலில் விழும்
விலங்குகளை காக்ககெவன்றும்
குரங்குகளை பார்க்கவென்றும்
சடங்குகளை வளர்க்கவென்றும்
கனிமங்களை பாதுகாக்கவென்றும்
சட்டங்களும் சமவாயங்களும்
ஒழுங்குகளும் ஒப்பந்தங்களும்
ஓராயிரம் ஓராயிரம்
இவையெல்லாம் எளியவனை சுரண்ட
வலியவன் விரித்த வலைகள்
சிற்றரசுகளை சூறையாட
வல்லரசுகள் வைத்த பொறிகள்
மக்களைக் காட்டி மக்கள்
பெயரால் மக்களைக் கொல்லும்
மகா சூட்சுமம் இதன் மாற்றுப்
பெயரோ யாவரும் புகழும் - ஜனநாயகம்
காரணம் கேட்டால்
மனிதனோர் அரசியல் பிராணி
காரணம் கண்டறிந்தால்
மனிதனோர் அதிகாரப் பிசாசு
ஆதலால் அடிக்கடி அரங்கேறுகிறது
அகோரப் பாசிசம்
காஸா தீக்கிடங்கும் பலஸ்தீன
பெரு மயானமும் ஐநாவின்
ஈமக்ககிரியைகளாம்
The Gaza hellfire and palestine cemetery
is funeral of United Nations organization
2.12 மு.ப 2024.04.21
தியாலம் - நேரம்
No comments:
Post a Comment