நாவில் தேனும் நெஞ்சில் தீயும்
கொண்டில்லை ஒரு பேயும் - ஆனால்
எப்படி ஆனாய் நீயும்
பேசுகையில் பாலும் தேனும் பாயும்
சிரிப்பினில் சீனிப்பாகு ஊறும்
ஆனால் உள்ளே கருநாகம் சீறும்
நட்பென்ற சொல்லோ கூடும்
நண்பர் என்று ஊரே பாடும்
ஆனால் நயவஞ்சகமோ கூத்தாடும்
பீதிக்குதாரணம் பேயும்
நன்றிக்குதாரணம் நாயும்
நஞ்சுக்குதாரணம் நீயும் - என்றே
நாளை வரலாறு கூறும்
உன் அன்பில் தோற்கும் தாயும்
ஆனால் அன்பின் அடியில்
நட்போ சாகும் - பொல்லாத
வஞ்சத்தீயோ வேகும்.
கொல்லும் நஞ்சும் உன்
வஞ்சத்தால் சாகும் - பொல்லாத
நாகமும் உன் பொய்யன்பாலே
கொஞ்சம் ஏமாறும்
கனியாய் இனிக்கும் உன்
தனியான வாக்கும் - மணியாய்
அணியுமுன் மணியான பேச்சும்
நெளியும் பாம்பின் நஞ்சை வெல்லும்
கூடிப்பழகி கூடவே இருந்து
கபட நாடகமாடும் கேடுகெட்ட
வேலை நீ செய்ததற்காய்
நானொன்றும் நட்பின்
மகிமை யறியாதவனுமல்ல
தக்க பாடம் தராமல் விட
நான் திராணியற்றவனுமல்ல
2021.01.20
4.00 பி.ப
சிறை
ஆறாம் மாடி
கொழும்பு

No comments:
Post a Comment