வனமும் மலையும் விழியில் விழுந்து
மனதில் பதியும் வேளை புளுங்கி
நொந்த நெஞ்சு புளகாங்கிதம்
கொள்ளுதே!
இதற்குள் மேகம் மழையாய் வந்து
நீரென காற்றில் கலந்துவிட்டால்
சொல்லவா வேண்டும் நெஞ்சம்
கொள்ளும் நிம்மதியை
வரண்ட பூமியில் வந்து பாயும்
வெள்ளமாய் - விடாய் எடுத்த
நாவிற்கு வார்த்துவிட்ட நீராய்
பொசுங்கித் தீய்ந்த மனப்பெருங்
காடு உடனே பூஞ்சோலையாகுதே!
வெப்பம் தட்பமாகி
கொண்டல் மேலும்
தென்றல் கீழும்
குளுமையேற்ற - விழியில்
நதியில் ஏன் மொழியிலும்
பசுமை சேர்க்குதே!
மறந்து இறைவனை வாழும்
மனமும் வரண்ட பாலைதான்
வந்து பாயும் வெள்ள நீராய்
திருமறையை கொண்டுவிட்டால்
நெஞ்சும் பசுமைதான்.
ஈரல் கொண்ட பலர்
இகமிங்கு இருந்தாலும்
ஈரமென்னவோ இல்லாதுதான்
இருக்கிறதே! - ஈரம் வேண்டுமெனில்
இயற்கையை பார்ப்பீர்
இயற்கையின் வழியில்
இறைவனை தரிசிப்பீர்
நீர் கண்ட ஈசன்
கண்களால் அல்ல கருத்தியலால்
ஈசனின் நேசம் தேடுவோர்
மனிதனை போற்றுக!
2022.08.26
3.14 pm
![]() |
| with farhan Sacha |
.jpeg)
No comments:
Post a Comment