Saturday, 3 September 2022

அன்பின் ஆசான் ஜவ்பர்

மரகத மனம்  பொருத்திய 

மகோன்னத மானிடர்.

மரங்களில் மகாபிரியம் கொண்டதனால்

மரம் தரா மாமலரவர்.


மக்கள் நெஞ்சில் தினம் 

மங்காது வாழ்பவர்

பமுணுகமை எங்கும் சிறக்கப்

பெயர் போனவர்.


கெக்கிராவை முழுதும்

அறிமுகம் ஆனவர் - அங்கும்

அதிகமதிகம் கொண்டிருந்தார்

அவர் மாணவர்.











நாடெங்கிலும் ஏராளமாய் வாழ்கிறார்

அவருக்கு நண்பரானவர்.

சிங்களமும் தெளிதமிழும்

சங்கடமின்றி எழுதப்பேச

என்றும் துறைபோனவர்.


மரப்பிரியர் அவர் - மரம்போல்

தினம் மாணவருக்கு பள்ளிக்கூடத்தில்

காய்த்துப் பழுத்த கனிமரமானவர்.

தவறமால் தினம் பள்ளிக்கூடம்

போவதில் தனிமரமானவர்.


கற்றுக் கொடுப்பதில் கற்பகதருவானர்

மருத்துவக் கல்லூரி மாணவருக்கு

மருத்துவமனைக் கட்டிலில் தானே

கற்கை நெறியானவர்.


காண்பவர் எல்லாம்

கண்டதும் கண்டு மகிழும்படி

புன்னகை மலரை

முகத்தில் கொண்டாரவர்.












கசங்கும் என்று நீவாத

பூவை போன்று – பூவான 

பிறர் மனம் நோகுமென்று

சொற்தீயாக சொல்லாதவர்.


அநீதிக்கும் அசத்தியத்துக்கும்

அவர் பொல்லாதவர்.

கர்வமும் கபடமும்

கிஞ்சிற்றும் இல்லாதவர்.


பனுவல்களில் மேல் தீராப்

பெருங் காதலனவர்.

பமுணுகமை பாடசாலையில்

துணை அதிபரானவர்.




விபத்தெனும் பேரிடரில்

விழுந்து சிக்கி காலிரண்டும்

உடைந்து போனாரவர்

பின்னர் ஓரிறை அருளாலும்

அவர் பேருழைப்பாலும்

மீண்டெழுந்து நின்றாரவர்.


இயக்கம் குறைந்த இதயமாதலால்

தீராத நோயால் தொடராய் 

உபாதைக்கு உள்ளானாரவர்

உறவினர் மனம் வருந்துமென்று

வருத்தம் தன்னை தன்னுள்

வெட்டிப் புதைப்பாரவர்.




ஒற்றைச் சிறுநீரகம் சற்றே 

இயக்கமிழந்து  போனதனால்

இறைவனடி சேர்ந்தாரவர்.

இருதசாப்தத்துக்கு ஈராண்டுகள் 

குறைவென்றாலும் நோயோடு

நேசர்களுடன் வாழ்ந்தாரவர்.


இன்றோ எல்லோர்

மனங்களிலும் வாழ்கிறாரவர்

சோலை மலர் சூழவே – அவர்

நாளை சுவனமதில் வாழவே - அங்கு

ஓடையருகே நாம் காணவே 

நாளுமிறைவனை இறைஞ்சுவோம்.


திங்கள் எட்டு திகதி இருபத்தொன்று

அவர் உலகில் பிறந்தார்

திங்கள் எட்டு, திகதி இருபத்தொன்று

அவர் உலகை பிரிந்தார்


அன்பின் ஆசான் ஜவ்பர் - என்றே

யாவரும் அழைக்கும் என்னினிய

மாமனார் இறைசந்நிதியடைந்து

இன்றோடு இருவாரங்கள்.


2022.09.03

1.18 gp. g




My Uncle  M.L. Jawfar

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ


No comments:

Post a Comment