Friday, 19 August 2022

குற்றமென்பதில்லையே!

 குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

தன்னின வரலாறு கற்பதில் குற்றமில்லை 

குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

கற்ற வரலாற்றை மாற்றாருக்கு சொல்வதில்

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

பெற்ற அறிவை பிறருக்கு புகட்டுதல்

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

கற்றைப் புல்லேனும் விற்று வாழ்தல்

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

பெற்ற மண்ணைக் கட்டிக் காத்தல் 

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

சுற்றமென்றான போதும் குற்றமிழைப்பின்

சுட்டிக் காட்டல் குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

கொண்ட மதத்தில் பற்றுக் கொள்வதில்

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

குற்றவாளியென எமைச் சொன்ன போதிலும்  குற்றமிழைக்காத வரை

குற்றமில்லை குற்றமில்லை குற்றமென்பதில்லையே!

Thanks to Awantha 

இது பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை எனும் கவிதையை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியது.

2020.10.07

12.30 pm

 சிறை

 ஆறாம் மாடி

 கொழும்பு

No comments:

Post a Comment