நாலா திசையும் நாடுகள் நூறு
நாலாயிரமாண்டு வரலாறு
கடந்தது நம் நாடு - நாளொன்றுக்கு
மானுடர் நாலாபுறமிருந்து நம்மை
நாடிவருவார் நட்போடு
நாடுகள் பலநூறிடையே
நல்ல சுவனக்காடு - நம்மன்பின்
இலங்கை நாடு - இந்துமாக்கடலிடையே இறைவனமைத்த வீடு
இந்தியக் கண்டத்தின் கீழமைந்த
இருதயக் கூடு
இனமொழிமதங் கடந்து மக்கள்
வாழ்வர் அன்போடு - இவை
யாவுமறிந்து இனமதமென
பிளப்பார் அரசியல் நோக்கோடு
பிளவுதரும் பேத அரசியலை
பாழுங்கிணற்றில் போடு
ஒண்றிணைவோம் நாம் ஒருதாய்
புதல்வரெனும் உணர்வோடு
நீளகங்கை மகாவலி எங்கள் ஆறு
கல்லில் செதுக்கிய சிற்ப சீகிரியா
எங்கள் வரலாறு
புத்தமிந்து இஸ்லாமிடையே
வீணாயேன் தகராறு - மீன்
பிடித்து நீந்த நமக்குன்டு கடலாறு
சிங்களம் தமிழ்மொழி இரண்டிலும் பேதம் கிடையாது.
மூவினமும் ஒன்றிணையும்
சிவனொளி பாதமலை எம்
பாரம்பரிய மேடு - அங்கே காண்போம் ஒற்றைப்
பாதச் சுவடு
நெல் விளைய செடி தழைய
இன்பக் குளிர் நாடு
இதையத்தளவே சின்னஞ்சிறு நாடு - இதயமில்லாவிடில்
இயங்காது உலக நாடு
வாழ்வோம் வளமோடு
ஆள்வோம் அன்போடு
2020.07.18
10.30 AM
#சிறை
#ஆறாம்_மாடி
#கொழும்பு01

No comments:
Post a Comment