நாய்களே நலமாய் வாழும் நாட்டில் - நாமோ நாயினும்
கடையர் ஆக்கப்பட்டோம்.
நண்டுகளே தனிவளை கொண்டிருக்க -
நாமோ அடிபட்ட
நண்டுகளாய் பிடிபட்டோம்
நாரைகள்கூட நாலா திசையும்
போக - நாமோ நாலா புறமும்
சுவருக்குள் நசிபட்டோம்
மதிலுக்குள் மிதிபட்டோம்
நிழலுக்கும் நீதிமன்றம் நாடாத நாம் - நீசர்கள் என்றே நீதிமன்றில்
நிறுத்தப்பட்டோம் - நீங்காப்பழி
சுமந்து நெற்றியில் ஒட்டப்பட்டோம்
மனுக்குல விரோதி என
மங்காப் பெயர் சொல்லி
மன்றங்களில் அறிவிக்கப்பட்டோம் - தேசத்தின்
மீது கொண்ட பாசமெல்லாம் வெறும் வேசம் என்று
சொல்லி தேசவிரோதி
எனச் சுட்டுப் பட்டோம்
இலங்கை வரலாற்றில் நாம்
வெட்டப்பட்டோம் - இலங்கைச்
சிறைகளில் நாம் கட்டப்பட்டோம்
சிலரது தவறுகளால் வெட்கப்பட்டோம் - இறந்த உறவுகள் கண்டு வேதனைப்பட்டோம் - முழுதாய்
நாமே தான் நட்டப்பட்டோம் -
நாட்டில் நாம் ஒதுக்கப்பட்டோம்
உலகெங்கும் வெறுக்கப்பட்டோம்
பேசும் வாய்கள் கட்டப்பட்டோம்
வாழும் உரிமை மறுக்கப்பட்டோம்
எழுத்துரிமை பறிக்கப்பட்டோம்
எம்மினத்தின் இடுப்பெலும்பு
முறிக்கப்பட்டோம் - ஒட்டு
மொத்தமாய் ஒடுக்கப்பட்டோம்
எம்மவலக் குரல் கேட்க
யாருமின்றி தனிமைப்பட்டோம்
வளை - பொந்து
க
டையர் - இழிந்தோர்
நீசர் - தீயோர்
2020.11.09
06.30 PM
#சிறை
#ஆறாம்_மாடி
#கொழும்பு01

No comments:
Post a Comment