Thursday, 26 March 2020

கொரோனா


அருகில்  வருவான்
இருமித் திரிவான் - தம்பி
திரும்பி பாராமல் ஓடு - அதுதான்
கிருமிக் கொரோனா.

கொத்துக் கொத்தாய்
கொன்று விட்டது - உலகே
அசையாமல் நின்றுவிட்டது
கொரோனா கொன்று விட்டது

இது யாவும் மனிதன்
தான் செய்து கெட்டது
உயிரியல் போராம்
ஊடகக் கண்ணில் பட்டது
சீனா தோற்றுவித்தது
அமெரிக்கா பரப்பி விட்டது - என்றே
குற்றச்சாட்டு நூற்றை தொட்டது.

எப்படியோ எம்மில்
பல்லாயிரம் செத்தோம்
இன்னும் பன்னூறாயிரம்
பீதியில் தினம் சாகிறோம்

முற்றும் உடலை திறந்து
சற்றும் இடைவெளி விடாது
சுற்றும் முழு உலகும்
முற்றும் மூடி முக்காடும் சூடி
அறைக் கதவும் மூடி
அடங்கிக் கிடக்கிறது. 

இனியேனும் அடங்கியிருப்போம்
முகக்கவசம் தரித்திருப்போம்
ஊட்டச்சத்து உணவை
உண்டிருப்போம் - ஒரு மீட்டர்
இடைவெளியில் நாட்டங்கொண்டு
நடப்போம் - கொரோனாவை
கொன்றொழிப்போம்

மன்னாரமுது அஹ்னப்

2 comments: