Thursday, 12 March 2020

கோடி பெறும்



தாரமன்றி தங்கையராய்
தமக்கையராய் தாய்க்
குலத்தாராய் காணுமிடங்களில்
மங்கையரை மதித்திடாத
மானங்கெட்ட ஆண்சாதியை
அவமதித்திடல் கோடிபெறும்

கட்டிய கணவனன்றி
மற்றெல்லா ஆண்சாதிக்கும்
மாதர்தம் மேனியழகு காட்டியும்
குழைந்து வழியும் குதலைமொழி
வாயினில் பூட்டியும்இ நடையினில்
நாட்டியம் போட்டிடும் மாதரை
தெருவில் நடமாட அனுமதித்திடாமல்
குண்டான்தடி கொண்ட காவல்ப்படை
கொண்டு வீதிச்சட்டம் வகுத்திடல்
கோடி பெறும்

ஈன்ற அன்னை அகவை
கொண்ட அடுத்த கோதையரை
அன்னையாயன்றி வேறெந்த பழிக்குரிய
தென்னையாய் கொன்னையாய் பேசிடுவார்
நாவை அறுத்து எறிதல்
கோடி பெறும்

ஆசானாய் வந்து
அன்பாய் பழகி
அருகில் நின்று
புதல்வியாய் தங்கையாய்
தினம் வரும் சிறுமியரை
சீண்டிட எண்ணம் கொண்டிடும்
சண்டாளர் தாடையென்பை
தகர்த்திடல் கோடி பெறும்

மூப்பெய்தி முகஞ்சுருங்கி
நரைத்து மயிர் வயதாகியும்
பூப்பெய்திய பிஞ்சுப் பிள்ளையை
பேத்தியாய் கண்டிடாமல்
கூத்தியாய் கண்டிடும்
ஆடவனை அவ்விடமே
தலையறுத்து குழிவெட்டி
புதைத்திடல் கோடானு கோடிபெறும்

No comments:

Post a Comment