Sunday, 9 February 2020

வெற்றிலைப் பெட்டி


முள் நீக்கிய முளரிப்பூவும்
துகில் நீக்கிய குமரிப்புவும்
துஷ்டனால் தூக்கி எறியப்படும்
காமுகனால் கசக்கி பிளியப்படும்

ஓடகற்றிய ஆமையும்
ஓநாயக்ககப்பட்ட ஆடாகும்
மோடகற்றிய வீடும்
திருடருக்கு வாயத்த கூடாகும்

நாடற்ற அகதியும்
நாதியற்ற அநாதையும்
வீதியற்ற வெளியும் - பிறர்
கண்ணிற் காணாது அழியும்

ஆடை தவிர்த்த மாதும்
சூடிய ஆடைக்குள் உள்ளயாதும்
சூரியன் என பிரகாசிக்கும்படி
உடை தரித்த மாதும்

கண்டவர் நின்றவர்
வந்தவர் போனவர் என
யாவரும் கைவைக்கும்
விறலி வீட்டு
வெற்றிலை பெட்டிதான்.










முளரிப்பூ - ரோசாப்பூ
துகில் - ஆடை
விறலி - விபச்சாரி

No comments:

Post a Comment