Saturday, 18 January 2020

கவிச்சோறு

                   
எழுதக் கோல்
ஏந்தத் தாள் - எனக்கு
இருந்தால்
அந்த நாள் எனக்கு
பெருநாள்

கவிதையால்
எழுதித்தான் காலங்
கழிப்பேன் - அதை
கொண்டே
கண்டு இரசிப்பேன்

இன்பத்தேன் - எனக்குள்
வந்து பாயத்தான்
செந்தமிழ் பாவால்
செந்தேன் பாகால்
கவிச்சோறு காய்ச்சித்தான்
நானிருப்பேன்.

பரிமாறத்தான் பாவலர்
யாருமின்றி பசித்திருப்பேன்
பாதையோர தொலைவில்
பேதையன் வந்தாலும்
கவி விருந்துண்ண
பந்திக்கு அழைப்பேன்.

கவித்தேன் தனித்துண்டால்
தெவிட்டும் - ஒளித்துண்டால்
குமட்டும் - கொடுத்துண்டால்
மட்டுமே கூடிக்கொண்டிருக்கும்



No comments:

Post a Comment