புயலின் பற்களில் சிக்குண்டு
வயலின் மரங்கள் சரிவதுண்டு
வயலின் பற்களில் சிக்குண்டு
முயலின் முதுகத்தோல் கிழிவதுண்டோ?
கிழிந்திடும் அளவு இளகிய தோலை
வைக்க எத்தனை இளகிய மனம் வேண்டும்
இறiவா! உன் கருணைதனை
கணிப்பொறி கொண்டு கணிப்பிட முடியுமோ?
ஆண்டவா! உன் அன்பாற்றை என்மீது
ஊற்று நான் நற்றமிழில் நறுங்கவி வார்க்கவே!
நம்முலகுக்கு நற்போதனைகளை
நவில வந்த நம்தூதர் நபிகள் நாயகமே!
உமை நெஞ்சில் நினைத்து நான்
புலவன் பா புகல வந்தேன்.
நடப்பவைகளை புகழ வந்தேன்.
நறுந்தேன் ஒழுகும் நற்கவிகள்
நல்லபடி இயம்ப வந்தேன்.
ஆசிரியர் தின விழாச் செய்து
ஆங்கதிலே எமை புகழ்ந்து பெய்து
போற்ற வந்த பொன்னாபரணங்களே!
மனுக்குல மாணவ மாணிக்கங்களே!
எனைக் போன்ற என்சக ஆசிரிய தோழமைகளே!
பொறுமை மிகு பேரதிபரே!
பெருமை மிகு பணிப்பாளரே!
யாவருக்கம் என் சலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பேரழகும் நூறழகும் கொண்டமைந்த
கண்காட்சியிலே ஊர்பல வந்து
உவந்து பார்த்து வியந்து போய்
புகழ்போற்றி போனது – ஆனால்
அந்நிகழ்வை செய்து முடிக்க
நாம் செத்து மடிந்தோம்.
பாடநேரம் முடிந்தும் பிள்ளைகள்
பாடசாலை துறந்து போன பின்பும்
நாமிங்கு கிடந்து திட்டமிட்டு
வேலைகளை நோட்டமிட்டு
வட்டமிட்டு கட்டமிட்டு
செப்பம் செய்த முடித்தோம்.
பெரும் மழை பெய்து நீரெங்கும்
பெருந்தெருபோல் பரவி விரவி
பூமியெங்கும் தடவி அடவியெங்கும்
தவழ்ந்து போன வேளையிலே
வாகனம் ஒன்ற வந்து வழியில்
வழிதவறி வாய்க்காலில் விழுந்து
வளைந்து புதைந்து சக்கரமிறுகி
சப்தம் பெருகி திக்குமுக்காடி
திணறிய வேளை நாமும் நம்
மாணவர் குழாமும் துணை சென்று
ஆசான் ஷியாம் தலை கொண்டு
புதைந்ததை மிதந்திட செய்தோம்.
அதுமுடித்து புது வேலை தொடுத்து
விடிய விடிய நாம் வேலை செய்தோம்.
நட்ட நடு ராத்திரியில் ஆத்திரமடக்கி
ஆவேசம் கொள்ளாது அழகாய்
அமைத்து முடித்தோம் - இரண்டு மணி
முப்பது நிமிடம் இருவிழகளும்
இறந்து கிடந்தன.
அழகுகள் அயிரம் வனப்புன் கோடி
கண்டு மகிழ கண்ணிரண்டு போதுமோ?
அத்தiனை அழகு கண்காட்சி – அதனை
முடித்து அந்த நொடியே மறு வேலை
தொடர்ந்ததுவே பெண்ணாசிரியை
துணைகொண்டு தொடங்கி வைத்தோம்.
தெருவெங்கும் கணக்கின்றி
அலைந்து திரிந்து களைத்து
சளித்து மூளை விறைத்து
வேலை செய்து வந்தோம்
காராகி கரியாகி
போராகி புரியாகி
சேறாகி சுரியாகி
நாயாகி நரியாகி
நாம் வேலை செய்தோம்.
படை படையாய் பொருள்தேடி
உருப்படியாய் ஒருவிழாச் செய்ய
செருப்படி தேய பலகடைப்படி ஏறினோம்.
தேடுகிறேன் ட்ரைப்பொட்டு
ட்ரைப்பொட்டு என்றே சைப்
ஆசான் என்னை கடை முன்னே
கைவிட்டுப் போனார் - என்
கைபட்டு கைபட்டே பிய்பட்டுப்
போனது பொலித்தீன்
பைபட்டு பைட்டு கழிபட்டுப்
போனது என் கை மொட்டு
சுள்ளொன்று முள்ளென்று
தைப்பதுவாய் மழைத்துளி
முகத்தில் தைக்க இந்நிகழ்வை
உள்ளத்தின் உள்ளொன்று வைத்து
வெகு வேகமாய் வந்தோம்
நனைந்து மேனி குளிர மேல்த்
தாடையும் கீழ்த்தாடையும் போர்
செய்து ஓசைவீச வேகமாய் வந்துசேர்ந்தோம்
மனையிழந்து துணையிழந்து
மாடாய் தெருவெங்கும் வீதியளந்து
சைப் ஆசான் ஊரெங்கும் அலைந்து
திரிகையிலே மனைவி அழ தானும்
அழுது கண்ணீரால் செய்து முடித்தார்
நடக்கிறது சிறப்பாய் நிகழ்வு.
நட்டநடு நிசி என்று பாராமல்
மனைவி, மக்கள் யாவரையும்
அழைத்து அரங்கை அலங்கரித்தார்
ஆசான் ஷியாம் அதனால்
அரங்கெ ஜொலிக்கிறது.
இன்னும் கவியெழுதி காலம் களிப்பின்
நீங்கள் என் மேல் அளவற்ற அன்பை
வசை மொழியால் வாழ்த்துவீர்
ஆக இந்நிகழ்விற்கு உதவியோர்
உதவ நினைத்தோர் - நல்லபடி
நிகழ்வு நடக்க நல்லெண்ணம்
கொண்டோருக்கும் கோடி நன்றிகள்
குறிப்பாய் மூக்கில் கோபமும்
முகத்தில் சிரிப்பும் கொண்ட
முபஸ்ஸிருக்கு இறுதியாய்
முதல் நன்றி
This poem thou..... ��
ReplyDelete