![]() | |
| Art by - AMAL (Student) |
பாவெழுதி செதுக்கவா?
பூவிதழில் எவ்விதழை
உன்னிதழ் சேருமென
பூவிதழ் பல ஆராய்ந்து பார்க்கவா?
நாவிதன் இன்றி அன்னத்
தூவியென சீவிவிட்டு
சுருட்டிய கூந்தல் எந்நதியென
வளைந்தோடுமென என்
மதியை சோதிக்கவா?
தாவியோடி தண்ணீர் பருகி
தரை பார்த்துப்பின்
வான் பார்க்கும் மான்
விழியில் உன்விழி சேர்க்கவா?
வனஞ்சூழவிருக்க இராப்
பொழுதில் காயும் மதியோடு
கூந்தல் காட்டிடையே காயும்
முகமதியை கோர்க்கவா?
எதை எதை எடுத்து
உனை ஒப்பிட்டாலும்
ஒப்பிடுவதெல்லாம்
உன்னழகில் உன்
கூந்தலுக்குள் ஒழிந்துவிடுமடி
ஓராயிரம் ரம்மியமும்
அம்மிக்கொள்ளும் - விம்மியழுது
ஓரங்கொள்ளும் லண்டன்
பேரழகே!

No comments:
Post a Comment