ஊர் வீதி மூழ்கி யார் வருவார்
என்னை அழைக்க எனவேங்கி
நின்று கடைத் தாழ்வாரத்தில்
சுருண்டு நின்ற சைப் ஆசானை
நானீங்கிருந்து போய் இரண்டு
குடை எடுத்து ஒரு குடைவிரித்து
மறு குடை கையில் பிடித்து
சேறும் ஊறும் சிறு வீதி
வழியே குறுநடை கொண்டு
உறுமும் நாய் வழியே துரத்தி
அழைத்து வரும் வேளை
இடைவேளை ஆனது – வந்தறையில்
அமர்ந்த வேளை அஸ்மியா ஆசிரியை
தந்த சுவை அணிச்சல் எடுத்து வைத்தார்
நாவைத் தழுவிய சுவை அமுது
அணிச்சல் மாக் கரையும் தருணம்
உதட்டூறும் உமிழ்நீரும் கலந்து
குழைந்து தேன்வதை பிடித்து
பிளிந்தெடுக்கையில் கசியும்
![]() |
| birthday treat of Azmiya Teacher |
தின்னத்தின்ன நாவூறும்
காணக்காண கண்ணூறும்
கேட்கக்கேட்க செவியூறும்
மாஞ்சுவை பூஞ்சுவை யாவும்
மிஞ்வுமிவை தேஞ்சுவை
கொள்ளைச்சுவை கொடுத்த
ஆசிரியைக்கு நவில்வோம்
நன்றிச்சுவை நீடூழி வாழியவே!!!!

No comments:
Post a Comment