Sunday, 8 September 2019

வாழ்க்கை யாது????

முயல்ஆமை வெல்லாமை கிடையாது
முயலாமை கொல்லாமை கிடையாது
இயலாமை எல்லாமெய் கிடையாது
வயலாமை நில்லாமை கிடையாது

வாய்மை சொல்லாமை கிடையாது
தாய்மை புகழாமை கிடையாது
ஆய்வை ஆயாமை சரியாகாது
ஓய்வை பெறாமை சரியாகாது

தொய்வை நீக்காமை சரியாகாது
உய்வை காக்காமை சரியாகாது
இழிவை போக்காமை சரியாகாது
துணிவை தேக்காமை சரியாகாது

பாவை மணக்காமை முறையாகாது
பாவை சுவைக்காமை முறையாகாது
கோவை மதிக்காமை முறையாகாது
பூவை இரசிக்காமை சரியாகாது

பாவை எழுதாமை மையேயாகாது
கோவை செய்யாக்கவி கவியேயாகாது
நோவை தராக்காவியம் காவியமாகாது
நாவை காக்காவாய் வாழாது

ஓய்வை நோக்காமல் நீ
ஆய்வை நீக்காமல் நீ
நோவை நோவாமல் நீ
சாவை சிந்திக்காமல் நீ
வாழ்வை வாழ் வையகம்
வாழும் வரை வாழ்வாய் நீ

No comments:

Post a Comment