உள்ளத்துக்கு உகப்பான, கண்டதும் கவர்ந்து இழுக்கக் கூடிய, பார்வைக்கு ரம்மியமான, மனதுக்கு இதமான காட்சிகள் எத்தனை எத்தனை? ஏராளம்.
அதே போல் உள்ளத்தில் உவகை ஏற்படுத்தம் ஓசைகள், பறவைகளின் பேச்சொலிகள், பாடல்களின் இராகங்கள், செவிக்குள் தேன் பாய்ச்சும் கீதங்கள் எத்தனை எத்தனை? அவை ஏராளம்.
மனம் விரும்பும், எப்பொழுதும் எம்மோடு இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கும் நறுமணங்கள் எத்தனை எத்தனை? அவை ஏராளம்.
தோலிற்கு சுகம் சேர்க்கும் தென்றலின் சுவை எல்லாம் எத்தனை எத்தனை அனுபவங்கள்? எத்தனை சுவை மிகுந்தவை? இயற்கையான தோட்டங்கள், வனங்கள், எழில் மலைகள், அழகு மலிந்த நதிகள், அழகொழுகும் கடல்கள், வனப்பு வடியும் அருவிகள், அதே போல் செயற்கையான தோட்டங்கள், சோலைகள், மாடங்கள், கூடங்கள், கோபுரங்கள், தொங்கு பாலங்கள் என்று ஏராளம். ஆனால் எல்லாம் அப்படியே இருக்கின்றன.
அவற்றைக் காண்பவர்கள்தான் பலநூறு கண்களால் காண்கிறார்கள். சிலர் காதல் விளையாட ஒதுங்கு தளமாய் காண்கிறார்கள். இவர்கள் அற்ப இன்பங்களில் அடித்துச் செல்லப்படுபவர்கள். இன்னும் சிலர் சுற்றலாத்தளமாய் சுற்றிப் பார்த்து பொழுதைக் களிக்க வருகிறார்கள். இவர்கள் இலக்கற்றவர்கள்.
வேறு சிலர் அக்காட்சிகளில் அறிவியலைக் காண வருகிறார்கள். அதன் நீளம், அகலம், ஆழம், தோற்றம், முடிவு என்று ஆய்வு செய்கிறார்கள். காட்சிகளை கணக்குகளுக்கள் கட்டிவிடுகிறார்கள். இவர்கள் புதிய சேதியை உலகுக்கு செப்ப வருகிறார்கள்.
மேலும் சிலர்காட்சிகளை காணுகையில் அதனை அப்படியே சுவைக்கிறார்கள், மலைக்கிறார்கள் அதன் அழகின் சுவையில் மதி மறந்து மிதக்கிறார்கள். இவர்கள் இரசிகர்கள். வேறு சிலர் இவ்வாறு கண்டு இரசித்த, கேட்டு சுவைத்த, தொட்டு புளகாங்கிதம் அடைந்த, புசித்தனுபிவித்தவைகளை பிறரும் புரியும் வண்ணம், மற்றவர்களும் இரசிக்க வேண்டுமே! பிறரும் அனுபவிக்க வேண்டுமே! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் தழுவட்டுமே! என்று அவற்றை இலக்கியமாகவோ! புனைவாகவோ! கவிதையாகவோ! ஓவியமாகவோ! வரைந்துவிடுபவர்கள் கலைஞர்கள்.\
ஆனால் அழகான பிரமாண்ட மலைத் தொடர்களிலும், வான்தொடும் சிகரங்களிலும், அகன்ற சிகரங்களிளும், ஆழ்ந்த ஆழிகளிலும், சோலைகளிலும், பாலைகளிலும், அருவிகளிலும், கோபுரங்கள், கோட்டைகள், கொத்தளங்களிலும, ஞாயிற்றக் குடும்பங்களிலும், வான் மழையிலும், மேகம் மோதிப் பிறக்கும் மின்னல்களிலும், காற்று வெளியிடைகளிலும், மொத்த பிரபஞ்சத்திலும் அதனைக் கண்டு இரசித்து அதனை பிறருக்கும் சொல்லி சுவைக்க வைப்பதோடு நின்றுவிடாமல், இவை எல்லாவற்றிற்கும் பின்னால் இருக்கும் மிகப்பிரம்மாhண்டமான சக்தி, ஆற்றல், பரம்பொருள் பற்றி சிந்திப்பவர்கள் வெகு சொற்பமானோர். அரிதிலும் அரிதானோர்.
இப்பிரபஞ்சத்தின் தோற்றம், முடிவு, ஆக்கம், அழிவு, ஆழம், அகலம், நீளம், நிறை அதன் செம்மை, வனப்பு, எழில் அவற்றை கட்டமைத்த துல்லியம், நுட்பம், திட்பம், நுணுக்கம், நுண்மாண் நுழைபுலம், பேரறிவு, மனிதன் செய்த மாபெரும் சாதனைகள், அவற்றை செய்வதற்கு உதவிய மூளை, அந்த மூளையை சிரஷ்டித்தவன், பேரறிவு, பரம்பொருள் இவற்றை எல்லாம் காண்பவர்கள் இறைவனை காண்பவர்கள். இவர்கள்தான் ஞானிகள்.
ஒருவன் ஒரு குகையை தன் துணையோடு துயிலும் இன்பப் பொழுதுகளுக்கு பயன்படுத்துவானேயானால் அவன் சாதாரண மனிதன். அற்பன் ஆசைகளின் அலகைளில் அடித்ததுச் செல்லப்படுபவன். இச்சைகளின் அக்கினிக் கொழுந்துகளில் எரிந்துவிடுபவன்.
அதே குகையை ஆய்வு செய்பவன் ஆய்வாளன். அங்கே கனிமங்கள் நவரத்தினங்கள் பற்றி ஆய்வு செய்தால் அவன் அகழ்வாராய்ச்சி செய்பவன். அக்குகையில் பழைமை நாகரிகங்களை தேடினால் அவன் வரலாற்றாய்வாளன். அவற்றில் வரலாற்றுத் தடயங்களை தேடினால் அவன் தொல்பொருள் ஆய்வாளன்.
அதே குகையில் பதுங்கி இருந்த வழிப்போக்கரை கொள்ளையிட முயன்றால் அவன் கொள்ளைக்காரன். அதே குகையின் சௌந்தர்யத்தைக் கண்டு வியந்து கரைந்துருகி இரசித்து மகிழ்ந்தால் அவன் இரசிகன். அக்குகையில் தான் கண்டு சுவைத்த பேரழகை பிறரும் கண்டு சுவைக்கும் வண்ணம் எழுத்திலோ பேச்சிலோ இசையிலோ ஓவியத்திலோ சிற்பத்திலோ செதுக்கிவிடுபவன் கலைஞன்.
ஆனால் அதே குகையின் அழகின் செம்மையின் பின்னால் இருக்கும் பேராற்றலை, பெரும் சக்தியை, பரம்பொருளை, இறைவனை காண்பவன் ஞானி.
அதனால்தான் நபிகள் நாயகம் ஹிராக்குகையில் தனித்திருந்து அக்குiகையின் பின்னால் உள்ள பிரம்மாண்டமான இறை சக்தியை உணர்ந்தார், இறைவனின் போதனைகளை வாங்கிக் கொண்டார். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவே இறை போதனைகளை எல்லோருக்கும், எங்கும் பரப்பினார். ஞானி ஆகி பின் கலைஞர் ஆனார் அதனாலே ஞானக்கலைஞர் ஆனார்.
![]() |
| ஹிராக்குகை |
நபிகளார் அதனால்தான தன் ஆசைகளை நெறிப்படுத்தினாhர் நெறிப்படுத்துவற்காய் ஆசைகளை எல்லாம் பொறுக்கி எடுத்து நூலில் கோர்த்து ஞாhனத்தால் அறிவால் கட்டி வைத்து அதனை ஆண்டவன் அடியில் சமர்ப்பித்தார்.
ஆக குகை ஒன்றுதான் அதனை வீணாகவும், பயனாகவும், அர்த்தமற்றதாகவும், அர்த்தப்புஷ்டி உடையதாகவும் மாற்றுபவர்கள் மனிதர்கள்தான். வாழ்வும் அது போலதான் வாழ்வை பொருள் உள்ளதாயும், பொருள் அற்றதாயும் மாற்றுபவர்கள் நாமேதான்.



No comments:
Post a Comment