சிந்திக்காமல் செய்வதல்ல
சிந்தித்துச்செய்வதே மகாசித்
எந்தெந்த வேலைக்கு நோக்கம்
என்னெனவென அறிவது மகாசித்
சிந்தித்துச்செய்வதே மகாசித்
எந்தெந்த வேலைக்கு நோக்கம்
என்னெனவென அறிவது மகாசித்
எடுத்ததும் முடித்திடவோ
சொன்னதும் நடத்திடவோ
இதொன்றும் மூடர் தம்
மூடக்கொள்கையல்ல
சொன்னதும் நடத்திடவோ
இதொன்றும் மூடர் தம்
மூடக்கொள்கையல்ல
ஏன் எதற்கு என்ன இலக்கு
சொன்னபடிதான் செய்யணுமா?
இல்லை இலக்கையடைய வேறு
முறையிலும் செய்வதே மகாசித்
சொன்னபடிதான் செய்யணுமா?
இல்லை இலக்கையடைய வேறு
முறையிலும் செய்வதே மகாசித்
எழுத்தையும் வார்த்தையையும்
முழுதாய் ஏற்காகாமல்
எழுத்திலும் பேச்சிலும் பொதிந்த
உட்பொருளை அறிவது மகாசித்
முழுதாய் ஏற்காகாமல்
எழுத்திலும் பேச்சிலும் பொதிந்த
உட்பொருளை அறிவது மகாசித்
நீ பொய்யுரைத்தால் கதிரவன்
கிழக்கே மறையுமெனில் கதிரவன்
கிழக்கே மறையாது மாறாய்
நீ மெய்யுராப்பாய் என்பது மகாசித்
கிழக்கே மறையுமெனில் கதிரவன்
கிழக்கே மறையாது மாறாய்
நீ மெய்யுராப்பாய் என்பது மகாசித்
சொன்னதை சொன்னபடி
செய்தால் நீ பாசித்
சொன்னதை மூளையினடியால்
செய்தால் அது மகாசித்
செய்தால் நீ பாசித்
சொன்னதை மூளையினடியால்
செய்தால் அது மகாசித்
பேரீச்சை கொடுத்து பெருநரகை
துறந்திடு என்பது பேரீச்சை கொடுப்பதற்கல்ல
பேருதவிகளை பிறருக்கு புரிந்து
பெருநரகை துறப்பதே மகாசித்
துறந்திடு என்பது பேரீச்சை கொடுப்பதற்கல்ல
பேருதவிகளை பிறருக்கு புரிந்து
பெருநரகை துறப்பதே மகாசித்
கால சூழலில் கருத்து மாறும்
ஆளுக்காள் சட்டம் மாறும்
தேவைக்கேற்ப தீர்ப்பு மாறும்
ஆனால் இலக்கு மாறாதது மகாசித்
ஆளுக்காள் சட்டம் மாறும்
தேவைக்கேற்ப தீர்ப்பு மாறும்
ஆனால் இலக்கு மாறாதது மகாசித்
No comments:
Post a Comment