Friday, 12 July 2019

ஆசான் ஷியாம்

கார் நிறத் தார் பூசிய
தெருவின் இரு புறமும்
பெரு மரங்கள்  நிழல் தரவே!!
தெருவின் ஒரு மருங்கில்
நான் நின்று காத்திருக்கவே!!

பின்னிருந்து வந்தது ஒரு
பெருங் கம்பீரக் குரல்
திகைத்தேன் விறைத்தேன்
மலைத்தேன் திரும்பிச் சிரித்தேன்
உடனே மேனி சிலிர்த்தேன்

என் முதல் ஆசிரியப் பணியின்
மாசறு மகோன்னத மானிடர்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும்
இல்லாத என் ஆசிரியத் தோழன்

நட்பிற்கொரு நல்லதொரு நாதம்
வெகுளிக்கு வெகுண்டெழும் வேதம்
கனிவுக்கு குளிர் மார்கழி மாதம்
உதவிக்கு ஒப்பாக இல்லை ஏதும்.

ஒரே சொல்லில் படையும்
பயம் கொள்ளும்
ஒரே சொல்லில் சப்தங்கள்
யாவும் சரண் கொள்ளும்
ஒரே சபையில் ஷியாம் ஆசான்
என்கையில் சபையே அவரை
மகுடமென சூடிக் கொள்ளும்
                       
         


சிகை முடி  சீவிய அழகும்
முகம் மீது வாரிவிட்ட தாடியும்
கரும் பளிங்கென மின்னும் முகமும்
கண்ணாடி சூடிய அந்தப் பொழுதும்

சிறுதொப்பை பேரழகும்
சூடிய கறுப்புடை காரழகும்
கருநிற புரவியென உந்துருளியில்
வந்து நின்று எந்தன் முன்
பேசுகையில் திகைத்தேன்
விறைத்தேன் மலைத்தேன்

ஆகா!! எத்தனை அழகு
எத்தனை கம்பீரம் - குரலில்
எத்தனை கர்ச்சனை
நூறிள மாதரும் அவர் மேல்
காதல் கொள்ள இவ்வெழில்
எல்லாம் ஏராளம் என்றாகுமே!!

கருநிற ஆடை - கண்ணாடி
சூடிய காட்சி இன்னும் என்
கண்ணுக்குள் - இனியும்
குடி கொண்டிருக்கும்
நீர் நீடூழி வாழ்க!!!!
உம் புகழ் வானேறி வளர்க!!!


No comments:

Post a Comment