செந்தமிழையும் பைந்தமிழையும்
ஒரு புறம் வைத்துவிட்டு – நம் தமிழை
இலகு தமிழை கொஞ்சம் என்
கவிகளில கலக்கவிட்டிருக்கிறேன்
நாற் திசை எட்டுத் திக்கு
பதினாறு கோணம் நாடெங்கும்
புகழ் பொங்க, எங்கள் வீடென
இலங்கும் தங்கத் தலம் நளீமியாவிற்கு
நாலா புறமும் இருந்து வருகை தந்திருக்கும்
அன்னையரே! தந்தையரே!
பெரியவரே! சிறியவரே!
யாவருக்கும் சுவனத்து முகமன்
அஸ்ஸலாமு அலைக்கும்
அகிலம் சமைத்து அதில்
தன் புகழ் நிலைத்திட
செய்திடும் வல்லவன்
அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
ஆண்டு தோறும் ஐம்பது
கற்கைகள் பட்டை தீட்ட
ஐநூறு கற்களில் தேர்வு நடாத்தி
அற்புதக்கல் ஐம்பதை தரம்பிரிப்பார்
2012.05.09 அன்று
மீயுயர் தகைமை மிகு ஐம்பது
முத்துக்கள் தேர்வு செய்ததில்
தொடுகை வருடத்தில்
நாற்பத்தெட்டு முத்துக்கள் சேர்க்கப்பட்டன.
பின் அழுகை வருடத்தில்
நான்கு முத்துக்கள் சிதைந்தன
அது தொடர்ந்து எழுகை
வருடத்தில் சில முத்துக்கள் சிதறின
இங்கனம் நடுகை வருடம்
பதிகை வருடம், பொதிகை வருடம்
என சிதைந்து சிதறி குறைந்து குறைந்து
விடுகை வருடத்தில் இன்று 29
முத்துக்கள் பட்டம் பெற்று
சந்தைக்கு வருகின்றன
இம்முத்துக்கள் இருபத்தொன்பதும்
கலைகள் பல பயின்று
நாடகங்கள் பல அரங்கேற்றி
விவாதங்கள் பல வென்று
பரீட்சைகள் பல தோற்றி
அனுபவங்கள் ஆயிரம் பெற்று
உரைகள் பல பொழிந்து
கவிகள் பல புனைந்து
கதைகள் பல வரைந்து
விழுமியங்கள் பல பேணி
இன்று பட்டம் பெற்று
வெளியேறுகின்றன.
இருபத்தொன்பது முத்துக்களில்
முதல் முத்து அப்ஸல்
மூதூரில் உதித்தவன்
முன்னுதாரணமாய் இருப்பவன்
பேச்சில் விண்ணன் - பொதுவாய்
எல்லாத்துறையிலும் சிறந்தவன்
முத்துக்களில் இரண்டாவது
ஜிப்ரான் பாலமுனை காத்தான்குடி
உண்மையில் ஓர் உளவியலாளன்
பேச்சும் எழுத்தும் சிறக்க
தத்துவங்களில் மிதக்க
திறமை மிகுந்தவன்
மூனறாவது முத்து நிப்கான்
மாவநல்லை மண்ணின் மைந்தன்
இடையாறாது தொடர் கற்றல் நாயகன்
மனன சக்தி கொண்ட மாபெரும்
அறிஞன்- குர்ஆனை நெஞ்சில் கொண்ட மேதை
நான்காவது நாயகன் இபாஸ்
கல்லெலியாவில் பிறந்தவன்
எல்லோருடனும் அன்பாய் பழகுபவன்
நிர்வாகத் துறையில் விற்பண்ணன்
ஐந்தாவது ரிழ்வான்
கஹட்டகஸ் திகிலியவை சேர்ந்தவன்
இதயங்களை வெல்பவன் - கண்டதை
அப்படியே வரையும் அபார ஓவியன்
ஆறாவது பஸ்மின் கல்கமுவை கதாநாயகன்
திறமை மிகுந்தவன். நூலாக்கம் காணொளி
ஆக்கம் படப்பிடிப்பு எல்லாம் அறிந்தவன்
ஏழாவது உலப்பனை சாஜித் சமூன்
பழகத் தோழன் படிக்க வீரன்
எதிர்கால் தஃவாவின் தலைவன்
எட்டாவது நஸ்ருல்லாஹ்
பாணந்துறையில் பிறந்தவன்
அமைதி நிறைந்தவன்.
ஆங்கிலத்தில் அரசன்
அங்கில ஆசான்
ஒன்பதாவது மொரட்டுவையில்
பிறந்த அன்பாய் பழகும்
நண்பன் மின்ஹாஜ்
நாளை சிறந்து வாழ்பவன்
பத்தாவது பவளம் ரிஸ்னி
மாத்தளையின் மைந்தன்
மனங்கவர் பேச்சாளன்
கண்டாரை கொள்ளை
செய்யும் வசீகரன்
பதினொராவது சாஜித் புஹாரி
தியுரும் பொலயை சேர்ந்தவன்
போகும் இடம் எங்கும் படை சேர்ப்பவன்
வங்கியலில் தனித்துவமானவன்
12 ஆவது அர்ஷத்
ஹொரவபொத்தானையின் புதல்வன்
எத்தனை பெரிய பாடமென்றாலும்
சுலபமாய் மனனம் செய்பவன்
கல்வியில் சிறந்து விளங்குபவன்
அன்பில் அளவு கடந்தவன்
13 ஆவது ஆசிக் - திஹாரியில்
தழைத்தவன் - திறமைகள்
மிகைத்தவன் - கணனியில்
புகுந்து விளையாடுபவன்
எந்திரவியல் அறிந்தவன்
14 ஆவது ரிப்தி – நீர் கொழும்பில்
வாழ்பவன் - நிறையவே
தேடிக் கற்பவன் - தெரியாதவரோடு
பழகுபவன்
15 ஆவது அஸ்ஹர் - குருநாகலில்
குடி கொண்டவன் - எங்கள்
வகுப்பில் மாறா முதல்வன்
கற்றலில் இவனுக்கு நிகர் இவனேதான்
16 ஆவது நளீர் - நிக்கவெரட்டியின்
நாயகன்- காந்தக் குரலான்
பாடல் மன்னன் - குயில் கூட
இவன் குரல் கேட்டு நாணிக் கொள்ளும்
17 ஆவது நஜாத்
இந்த பேருவளையின் கதாநாயகன்
ஆங்கிலப் பேச்சாளன்
நடிகர்களின் நாயகன்
நகைச்சுவை நாயகன்
18 ஆவது அலி இஸ்ஸத்
புத்தளத்தில் பிறந்தவன்
எதையும் நிதானமாய்
செய்வதில் வல்லவன்
வந்தாரை வரவேற்பவன்
19 ஆவது ரினாஸ் அகுரஸ்ஸ
அடைக்கலம் கொண்டவன்
சிங்களத்தின் கதாநாயகன்
அரசியலில் முதலமைச்சன்
20 ஆவது இஜ்லான்
பேருவளையில் பிறந்தவன்
பிக்ஹ், அறபு என்று
பிரித்து மேய்ந்தவன்
கருத்து வேறுபாடுகளை
களைந்து எறிபவன்
21 ஆவது ரிகாஸ் மௌலானா
எல்லோருடனும்
கனிவாய் கதைப்பவன்
கல்வி என்றால்
கடமையுணர்ந்தவன்
பேச்சில் சிறந்தவன்
22 ஆவது ரஜாப்தீன்
அநுராதபுரத்தில் பிறந்தவன்
ஆங்கிலம் அறிந்தவன்
அறபு எழுத்தணிக்லையில்
விறபன்னன் - ஓவியத்தில்
தலை சிறந்த ஓவியன்
23 ஆவது இன்ஸாப்
அக்குரணையில் ஜனனித்தவன்
வியாபாரத்தில் விண்ணன்
மனனம் செய்வதில் மன்னன்
பாடங்களில் பயில்வான்
24 ஆவது ஜனூஸ் - நிந்தவூரை
சொந்த ஊராய் கொண்டவன்
குர்ஆனை மனனம் செய்தவன்
குறைகள் அற்றவன்
நிறைகள் கொண்டவன்
25 ஆவது சாஜித் நழ்ர்
கெக்கிராவை குடிமகன்
எதையும் எடுத்து செய்தால்
செவ்வனே செய்பவன்
26 ஆவது சௌக்கி மூதூரில்
பிறந்தவன் - ஆங்கில விற்பன்னன்
கால் பந்தாட்டத்தில் கதாநாயகன்
27 ஆவது மிக்தார் வாழைச்சேனையில்
வாழ்பவன் - கற்கத் துவங்கினால்
கரை காணாது தூங்காதவன்
விளையாட்டில் வெல்லாமல் ஓயாதவன்
28 ஆவது மின்ஹாஜ்
மூதூரில் உதித்தவன்
நட்பாய் பழகுபவன் -
உதை பந்தில் தலை சிறந்தவன்
கலை நயம் கொண்டவன்
இறுதியாய் நான் மன்னாரை
சேர்ந்தவன் உங்கள் முன் கவிபாடுபவன்
முத்துக்கள் இருபத்தொன்பதையும்
செதுக்கிய பொற்சுரங்கம் நளீமியாவை
நாம் காணுகையில் கண்கள் பனிக்கும்
நெஞ்சுக்குள் இனிக்கும் - விட்டுப் பிரிவதாய்
நினைக்கயில் இதையம் கூட பிணிக்கும்
மூங்கில் புதரிடையே
பதுங்கிடும் பந்தினை
தேடிட – மரங்கள்
அடர் மைதானம்
இங்கன்றி வேறெங்கு
யார் தந்திடுவார்?
உதை பந்தினை
உதைந்திடும் பொழுது
சிதைந்திடும் சிறுபுற்கள்
செறிந்து கிடக்கும் பெருவெளி
இங்கன்றி வேறங்கு
யார் தந்திடுவார்?
சுற்றி வாசல்
உச்சி மினாரா
பச்சை தீந்தை
தினம் ஐவெளை
தொழ ஓடில்லா தூணில்லா
மஸ்ஜித் இங்கன்றி
வேறெங்கு யார் தருவார்?
தெருவில் இருமருங்கும்
நிழல் மரங்கள் - மரங்களில்
பட்சிகளின் பேச்சரவமும்
கீச்சரவமும் இசைக் கூச்செலன
செவிகளில் பாய்ச்சிட பசுமரங்களிடையே
பாடம் பயில ஒரு பூங்காவனம்
இங்கன்றி வேறெங்கு
யார் தந்திடுவார்?
பூங்காவனம் வேறெங்கும்
உண்டு என்று யாரேனும்
நவின்றாலும் நான் சொல்வேன்.
ஏழைச் செல்வன் கொடையின்
முதல்வன் அறிவின் தலைவன்
அறிவுத் தந்தை நளீம் ஹாஜியார்
மீளாத் துயில் கொள்ளும்
மண்ணறைதனை நாம் தினம்
காணும் பூங்காவனம்
இங்கன்றி வேறங்கு
யார் தந்திடுவார்?
இலங்கை மண்ணெங்கும்
இல்லாத - வண்ணக்கவி நான்
பாடும் கண்ணொத்த வண்ணக்
கலையரங்கம் இங்கன்றி
வேறெங்கு யார் தந்திடுவார்?
விண்ணொப்ப விரிந்த
சின்னக்கடலோ இதுவென
எண்ணத் தோணும் - எண்ணற்ற
நூல்களாயிரம் கொண்டு
தத்துவமும், தர்க்கமும்
கலையும், ஞானமும்
ஒழுக்கமும், சீலமும்
வள்ளலென வார்க்கும்
நூல் வெள்ள நூலகம்
இங்கன்றி வேறெங்கு
யார் தந்திடுவார்?
தரம் பிரித்து, தேவை உணர்ந்து
நல்லறிவு புகட்டும் ஆசான்கள்
இங்கன்றி வேறெங்கு
யார் தந்திடுவார்?
மா, பலா, வாழை, முந்திரி
என்று எத்தனை கனிவர்க்கங்கள்
எல்லாம் முப்பதையும் கடக்கும்
கனிவர்க்கம் இங்கன்றி
வேறெங்கு யார் தந்திடுவார்?
இத்தனை வளங்களை
இழந்து இங்கிருந்து
அகன்று போகும் - பிரிந்து
விடைபெறும் தருணம்
எம் நெஞ்சங்களில் எத்தனை
வலிகள், நிறைந்தாலும்
ஒரு துளி சலனம்
சஞ்சலம் காட்டாது
விழியிருந்து வழிந்திடுமே
கண்ணீர்த் துளிகள்
நன்றி விடை பெறுகிNறூம்.
Enter your comment...miss you sheiks
ReplyDeletesollunga hasan hany
ReplyDelete