கரு நிற தார்பூசிய ஒரு வழித் தெரு அது. கருக் கொண்ட காரிருள் கலையும் வெள்ளாப்பு விடிகாலை அவ்வேளை, ஆள் நடமாட்டம் இல்லா அத்தெருவோரம் காகங்கள் கரைந்து ஆரவாரம் புரிந்து ஆர்ப்பரித்து குப்பைகளை கிளறும் பொழுது கேட்கிறது ஒரு மழலையின் அழுகுரல். ஆள் நடமாட்டம் கூடுகிறது, வாகனப் புழக்கம் வழமைக்கு திரும்ப வீரிட்டு அழுகிறது ஒரு குழந்தை வாகனங்களின் ஓசைகளுக்குள் கலந்த அந்த மழலையின் அழுகுரல் ஆட்களை எல்லாம் அவ்விடத்தை சூழ அழைத்தெடுக்கிறது.
ஒரு சிறுபையில் உலகை கண்டு ஒரு நாள் கூட கழியாத மழலை மாணிக்கம் குப்பையில் எறியப்பட்டிருக்கிறது. “யாழினிதே குழலினிதே தம் மழலை மொழி கோளாதார்க்கு” எனும் வள்ளுவ வாக்கு வலுவிழந்து வாடிக்கிடக்கிறது. மனிதம், மனச்சாட்சியங்களில் மறைந்து கொண்டு தலை குனிகிறது.
ஆகா! என்ன ஒரு பசுமை செழுமை குளுமை தனிமை இனிமை பல்கலைக்கழக வளாகம் முழுதும் இறைவனின் புதுமை சொல்லி முடிக்க போதாது எழுது கோலில் மை, அங்குதான் இரண்டாம் வருடத்தில் கல்வி பயில்கிறாள் ஆனந்தப் பிரியா அவளோடு என்றும் இணை பிரியா தோழியாhக இர்பானா. இருவருமே இருவேறு கலாசாரங்களினதும், மதங்களினதும், கூட்டு என்றாலும் இரவருக்குள்ளும் ஏரளமான ஒற்றுமைகள்.
ஆனந்தப் பிரியாவின் அளவு மீறிய அறிவு, அவள் கிருஸ்த்தவ மதத்தை சார்ந்தவளாக இருந்த போதிலும் இஸ்லாத்தின் மாண்புகளையும் மகோன்னதங்களையும் தன் மனத்திலே இருத்திக் கொண்டாள். தோரயமாக இருபத்து இரண்டு வயதை உடைய வாலைக் குமரிகள் இரவரும். இர்பானாவோ மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்ட கல்வி மட்டங்களில் ஆட்டங்காணச் செய்தாலும் அவனது பேரழகாலும் பெரும் இளைஞர் வட்டத்தை தன்பக்க வளைநத்துப் போடடிருந்தாள்.
எடுப்பான பேச்சு, விறைப்பான பார்வை, மிடுக்கான நடை வாலிபர்களை வெடுக்கென தன்வலையில் வீழ்த்திவிடுவாள் அவளின் பின்னால் அலையாத கல்லூரி மாணவர்கள் என்று சொல்வதற்கு யாருமில்லை. அதையும் கடந்து சொல்ல வேண்டும் என்றால் பல்கலைக்கழக உப வேந்தரின் மகன் ஜகதீஸ் ஆகத்தான் இருக்கமுடியும்.
என்றாலும் அந்த ஜகதீஸ் எந்தப் பெண்களின் பின்னாலும் அலைவதும் இல்லை. அவன் எதிர்காலம் வீணாய் தொலைவதும் இல்லை. வெளிப்படையில் அவனைப் பற்றி எந்த முறைப்பாடுகளும் வந்ததில்லை. ஆனால் இந்த இர்பானாவின் பெயர் மட்டும் இளைஞர்களின் உதடுகளில் தவழாமல் இருப்பதும் இல்லை, சில விரிவுரையாளர்களில் உதடுகளிலும் கூட சில வேளை இவளது பெயர் உரசிச் செல்வதுமுண்டு.
ஒழுக்கமான இஸ்லாமிய பின்னணியில் வளர்த்தவளாக இருந்தாலும்
இந்த இர்பானா பல்கலைக்கழகம் வந்ததன் பின்னரான அவளது நடவடிக்கை ஒரு ஓரத்திற் கொண்டு நிறுத்தியது. மத, ஜாதி, கலாசார வேறுபாடின்றிய தோழிகளின் நவீன ஒழுக்கமென சொல்லும் இழி குண விளையாட்டு செயற்பாடுகளில் இர்பானாவும் இனிதே இறங்கி, இரண்டற கலக்ககலானாள், என்றாலும் இர்பானாவின் அறைத் தோழி ஆனந்தப்பிரியா இவளை எச்சரிப்பதுமுண்டு. என்னதான் எச்சரித்தாலும் ஆனந்தப் பிரியாவின் எச்சரிக்கைகள் யாவும் இர்பானாவின் எரிச்சலை கிளப்பும் நச்சரிப்புக்களாகவே இருந்தன.
இர்பானாவிற்கு உபவேந்தரின் மகனான ஜகதீஸ் மீது ஓரீர்ப்பு உண்டாகியது. அவனது அழகு, திடகாத்திரம், எந்த மங்கைக்கும் மசியாத அவனது ஆண்மை யாவும் இர்பானாவை மெல்ல மெல்ல கிள்ளி எடுத்து கொள்ளை கொள்ளச் செய்தன.
ஆனந்தப்பிரியாவோ ஆடம்பரமாகவும் ஆரவாரமாகவும் வளர்ந்த பிள்ளை ஆனாலும் இஸ்லாத்தின் மீது ஏற்பட்ட ஒரு தீட்சன்ய பார்வை இஸ்லாத்தில் உண்டான ஆண் பெண் வேறுபாடுகள், சட்டங்கள், பெண் உரிமை, பெண் அந்தஸ்த்து, ஹராம் - ஹலால், குடும்ப வாழ்வும், இஸ்லாமிய வரலாறு போன்ற பல கூறுகளை தனக்குள் ஊற்றிக் கொண்டாள். பல தருணங்களில் இர்பானாவின் ஹிஜாபைக் கூட கடன் வாங்கி தான் சூடிக் கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பாள்.
ஆனாலும் அவளது குடும்பம், ஊர், அவளது தோழிகளது வட்டம் என்பன அவளை புறமொதுக்கும் என அஞ்சி மனத்தினுள் போட்டு பூட்டி புதைத்து மறைத்தே விட்டாள். இதே தருணத்தில் தான் இர்பானாவும் தன்னை மறந்தே விட்டாள். மெல்ல மெல்ல இஸ்லாத்தை களைந்து கொண்டு இருந்தாள். அவளது கனவும் கலைந்து கொண்டிருக்கிறது. நள்ளிரவு முழுதும் குத்தாட்டம் போடும் கும்;மாளத் தோழிகளோடு இவளும் ஒன்றாகவே சங்கமித்தாள், தன் அந்தஸ்த்தை தன் தோழிகள் மத்தியில் மீண்டும் கொண்டு நிறுத்தினாள் ஆனால் அவளது, மார்க்கம், மதம், கலாசாரம், பண்பாடு யாவற்றையுமே அவளது நண்பிகள் முன் கொன்று நிறுத்தினாள்.
இர்;பானாவின் போக்கும் நோக்கும் திசைமாறி போவதையும் இலக்கை மறந்து இன்பங்களில் திரிவதையும் அறைத் தோழி ஆனந்தப்பிரியா தெளிவாகவே அறிந்து கொண்டாள். சில பொழுதுகளில் இர்பானாவின் அலுமாரியில் ஆனந்தப்பிரியா அநாகரிகம் என ஒதுக்கி வைத்த அந்த ஆடைகள் இர்பானாவின் அலுமாரியில் இருப்பதை காண்பாள். ஒரு நாள் இரவு ஹிஜாப் அணியாது போதை மயக்கத்துடன் இர்பானாவின் அறைக் கதவில் “மடார் மடார்” என அறைகிறாள். அரைத் தூக்கத்தில் இருந்த ஆனந்தப்பிரியா கதவின் தாளை திறந்து அவளை உள்ளே அழைக்கிறாள். ஆனந்தப்பிரியாவிற்கு அதிர்ச்சியும் ஆவேசமும் அவளது நெஞ்சில் கோபப்பெருங் கனலை எண்ணெய் ஊற்றி கொழுத்திவிட்டது.
ஓங்கி அறைந்தாள் ஆனந்தப் பிரியா இர்பானாவின் கன்னத்தில். இர்பானாவோ கதி கலங்கி நினள்றாள். “ என்ன காரியம் செஞ்சிருக்கா?” என கோபாவேசத்துடன் ஆனந்தப்பிரியா கேட்கிறாள். “நீ என்ன ஓன்ட இஸ்டத்துக்கு ஆடுற? படிக்க வந்தா படி. ஏன்டி? என்ன கொற ஓன்ட அறிவுக்கு? அழகுக்கு? பண்பாடடிற்கு? மதத்துக்கு?” என்று கேட்டாள். இர்பானாவோ இந்த நள்ளிரவுப் பொழுதில் கலைந்த கூந்தலோடும், தலைக்கேறிய குடி போதையுடனும் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடினாள். விடிந்து போதை தெளிந்த பிறகு விடியற் காலை ஐந்து முப்பது மணியளவில் சுபஹ{ தொழுகை நேரத்தில் பார்க்கிறாள், ஆனந்தப் பிரியா சுபஹ{ தொழுiகை தொழுது கொண்டு இருக்கிறான். அவளோ பெயரளவில் ஆனந்தப் பிரியாவாக மட்டுமே இருக்கிறாள்.
தொழுது முடிந்;ததும் நேற்றிரவு நடந்தவற்றை ஆனந்தப்பிரியா இர்பானபவிற்கு எடுத்துரைத்தாள். அறிவுரைகள் கூட சொன்னாள். இஸ்லாத்தின் மகிமைகளையும் அதில் பெண் பேண வேண்டிய பெருங்கடமைகளையும் ஒழுக வேண்டிய விடயங்களையும், அஜ்னபி – மஹ்ரமி உறவு முறை பற்றியும் கற்றுணர்ந்த ஆனந்தப்பிரியா, பரம்பரை இஸ்லாமிய இர்பானாவிற்கு சொன்னாள். ஒரு வகையில் வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தினாலும் பிரியாவின் அறிவுரைகளையும் உபந்நியாசங்களும் ஒரு மாதத்திற்கே நின்று பிடித்தன.
பழையபடி இர்பானா நண்பிகளின் இன்பங்களில் இனந் தெரியாமல் போனாள், சில மாதங்கள் சென்றன. இர்பானாவோ பல்கலைக்கழக உப வேந்தரின் மகன் இறுதி வருட மாணவன் ஜகதீஸை காதலிப்பதாகவும் அவனின்றி அவள் உயிர் வாழ்வதில்லை என்றும் தனது அறைத் தோழி ஆனந்தப்பிரியாவிடம் சொல்ல அறைத் தோழியோ வெகுண்டெழுந்தாள் எரிந்து விழுந்தாள்.
“ என்ன பைத்தியமா ஒனக்கு, ஜகதீஸ் ஒரு இந்து, நீ ஒரு முஸ்லிம், எப்படி நடக்கும்?. நான் கூட இஸ்லாத்துக்கு வரலாமண்டு இருக்கன்” என்று ஆனந்த ப்பிரியா சினத்தோடு சொன்ன போது இர்பானா சொன்னாள் “ஏன்ட வயித்துல அவன் குழந்தை” என்றதும் ஆனந்தப் பிரியா ஒரு கணம் மூர்ச்சையுறும் நிலைக்கு சென்று மீண்டாள்.
இதனை கேட்ட பிறகு ஜகதீஸிடம் சென்று ஆனந்தப் பிரியா கதைத்தாள். அவனோ இர்பானாவை தனக்கு யாரென்று தெரியாதென்று சொல்லி பாராமுகமாக நடந்து கொண்டான். இரவு நடனக் கச்சேரிகளில் அவனது பல நண்பிகள் வந்து செல்வதாகவும் எதுவும் நடந்திருக்கலாம் என்றும். அப்படி ஏதாவது நடந்திருந்தால் கருக்கலைப்பு செய்துவிடலாம் என்று இர்பானபவை கருத்திற் கொள்ளாமல் கொள்ளாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
ஆறுமாத கர்ப்பவதியாக இர்பானா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். பின்னர் சில மாதங்களாக இர்பானாவை வெளியில் காண முடிவதில்லை மூன்று மாதங்களாக, இளைஞர்களின் உதடுகள் தவழ்ந்த இர்பானா இடம் தெரியாமல் போனாள் - இதனால் பெருங்கவலையும் பேரிடரையும் உணர்ந்த ஆனந்தப் பிரியா உப வேந்தரிடம் சென்று நடந்தவற்றை கூற அதற்கு உபவேந்தரோ இது போன்ற சம்பவங்கள் பல பல்கலைக்கழகங்களில் நிகழ்வது வழமைதான் அதனால்தான் அரசாங்கம் ஒரு மாணவிக்கு இரு முறை இலவச கருக்கலைப்பு செய்வதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று கூறிவிட்டார்.
வாரங்கள் பல கடந்தன பல்கலைக்கழகத்தின் பின் வீதி ஒரு மழலை குப்பையிலே அழுது கொண்டிருக்கிறது. காலை எட்டு மணி இருக்கும் சனக் கூட்டம் கூடியிருக்கிறது. பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் குழுமிக் கொண்டு ஏதோ முனுமுனுக்கிறார்கள். சிறிது நேரத்தில் முகம் மூடி ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு பெண் அம்மழலை எடுத்து அணைத்துக் கொண்டு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் சென்ற போது ஆனந்தப்பிரியாவை காணவில்லை இர்பானா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாள்.
அவளது பூதவுடல் தொங்கிக் கொண்டிருக்கிறது இர்பானாவின் குடும்பத்தார் வந்து பூதவுடலை பெற்றுக் கொள்கின்றனர். இர்பானாவின் “நாநா” நடந்தவற்றை கேட்க பல்கலை உபவேந்தர் ஊமையாக நிற்கிறார். ஹிஜாப் அணிந்து குழந்தையை கையில் ஏந்திய இந்த யுவதி அவரிடம் நடந்ததை கூறி இக்குழந்தையை காப்பாற்ற அவள் தாயாக வருவதாகவும். இர்பானாவின் நாநாவை தான் மணந்து கொள்வதாகவும் சொன்னாள்.
இர்பானாவின் நாநாவும் யோசித்துவிட்டு அவளது பெயரை கேட்டான். அவளது பெயரோ ஆனந்தப்பிரியா அவள் இஸ்லாத்திற்குள் இதன் மகிமை கண்டும் இதன் ஆண் பெண் வரைமுறை கண்டும் வந்துவிட்டதாக கூற இருவரும் திருமணம் செய்தனர். கட்டுக் கோப்பை பேணி கட்டுப்பட்டாள் ஆனந்தப்பிரியா. கட்டுமீறி தட்டுப்பட்டு வீழந்தாள் இர்பானா.
இஸ்லாத்தின் ஆண் பெண் வரையறை கற்பின் கேடையம், கவசத்தை
எவள் சூடுகிறாளோ அவள் பாதுகாக்கப்படுவாள். எவள் களைகிறாளோ கசக்கி எறியப்படுவாள்
.
No comments:
Post a Comment