Sunday, 10 March 2019

மாற்றம்


வெள்ளொளி வெளி யெங்கும் பாய
மின்மினி புல்வெளியெங்கும் மேய
கடலலையில் கல்லளவு தேய
உன் நாமம் சொல்லி மைத்துளி காய

இறiவா! உன் புகழ் பாடி 
கை வண்ணக்கவி காகிதக்க
கடலில் மேயத் தூயவனே!
உனைத் துதி பாடுகிறேன்

அறபு ஜாஹிலிய்ய நபட்டடார்
அருகிருந்து அண்டை வீட்டார்
ஒரு நாளும் சண்டை காட்டார்
என யாரும் இருக்க மாட்டார்

கிழக்கு வெளக்கும்  முன்
கொலை வழக்கு – பிணக்கு
வழக்கு அவர்கள் அனுதினம்
பார்க்கும் கணக்கு வழக்கு

ஈன்ற மகனை பிள்ளை
என கணியார் - தாரத்தை
பிரியார் தாயை  மதியார்
பெண் ணென்றால் தாய்க்குலம்
என்றே நினையார் - தெருவிற்கு
கூடும் நாயென்று மறவார்

கோடை வந்து ஓடை வரண்டால்
ஆடை அகற்றி காட வாடைவீச
பிடித்த பீடை அகல அறபு ஜாடையிலே
கஃபாவை மங்கையர் வலம் வருவார்

கூடிப்பல இடையர் கோடிப் புளுகுகள்
புனைந்து கோடிப் பெண்கள் நாடிப்
போய் அவர் செடிப் பெண்களோடு
கூடிப்பழகி கொடும் பாவம் செய்வார்
ஆண் ஆசை மோகம் பொங்கசில
தேவதையர் காடையரை தேடி வருவார்

மரித்த பிணத்தையும்
உரித்த பன்றியையும்
விரித்த கம்பளத்தில்
சிரித்த அமர்ந்து
மதுக்குடித்து மகிழ்வார்

நாளொன்று பகை வந்து சேரின்
நாற்பது ஆண்டாலும் அழியாதே!
அது நீங்கா வடுவென்று மனங்களில்
விடு விடுவென்று கோபக் கனல்
கொண்டு குரோதம் பொங்க நெடுநாள்
போராட்டம் செய்வார். செத்து மடிவார்
ஆனால் யுத்தம் செத்து மடியாது.

கனாத் தினம் கண்டு
வினாத் தினம் கேட்டு
பிணாப் போல் மனதில் உருவங்
கொண்டு வருவான் சிற்பி

உளியால் செதுக்கி களியால் ஒதுக்கி
கைநுட்பம்  பல பார்த்து- மூக்கு
முழி பொருத்தி நாக்கு வெளித்
அதரிய பாக்கு மரமாய் நீட்டி
தேக்கு மரமென வைரமூட்டி
வடித்திடுவான் வண்ணச் சிலை

இறைவன் படைக்காத படி
இவன் எண்ணம் எல்லாம்
கூட்டிச் செய்த  சிலையை
கஃபா எங்கும் சூழ சமைத்து
தினம் சுற்றி வருவார்.
காணிக்கை தனை நெற்றியில் 
ஒற்றி வருவார் - மடமையில்
முக்தி பெறுவார்.

எல்லாம் மடமை!
உண்டு மறுமையென
சொன்னால் வெகுளி -  என்னாலிதை
ஒரு நாளும்  ஏற்கவியலுமோ? –
முடியாதென ஈர் பத்தகவை
பட்டு வந்தார் பாரிற் பலதுயர்.
நம் நபி அண்ணல்.

கொலை புரியும் கொலைஞரை
மானுடக்க கலை பயிலும் செய்து
கவினுறு கலைஞராய் உருவெடுக்க
வழிசமைத்தது மாற்றம்

மாதரோடு கூதலுறு
காற்றினில் கூடிவிடும்
மானுடரை கூதலுறு
பனிவிழும் நிசிப் பொழுதில்
நின்று வணங்கச் செய்தது மாற்றம்

தாயை பேயென்றும்
தாரத்தை நாயென்றும்
மகளை சாவென்றும்
மமதை கொண்டோரை

தாயை சுவனச் சாவி என்றும்
தாரத்தை தன் விலா என்றும்
மகளை  இறை யருள் என்றும்
மனதில் கொள்ளச் செய்தது மாற்றம்.

வஞ்சம் கொண்டு வெஞ்சம் தீர்க்க
கொஞ்சப் பொழுதேனும் வந்திடில்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்
வேடர் குண மாந்தரை எட்டி
அடித்தால் எதற்கு தொட்டீரெனக்
கேட்கச் செய்தது மாற்றம்.

மதுவுங் கள்ளும் பருகி
கள்ளம் கபடம்  செருகி
போதை வெள்ளத்தில் உருகிக்
கலந்த உள்ளங்கள் மதியும்
நெறியும் சரி கண்டு – மதியம்
இரவு என்று இறை வணங்கச்
செய்தது மாற்றம்.

பிணத்தையும், படைத்தவையும்
உண்டு திரிவர் இறைப் பெயர்
கூறி அறுத்த பிராணி புசிக்கச்
செய்தது மாற்றம்.

நிரமாணித்த கஃபாவை
நிர்வாண வலம் வந்த
மாதருக்கு வெண்துணி
போரத்தி வலம் வரச்
செய்தது மாற்றம்.

கல்லை வணங்கினோர்
ரப்பை வணங்குவது மாற்றம்
மாற்றம் வணங்குவது மாற்றம்
அண்ணலார் மாற்றியது மனங்களை
மாறாய் ஜடங்களை அல்ல




No comments:

Post a Comment