துள்ளிக் குதித்து ஓடி
தாவி விளையாடி
கூடிக் கூடி - புற்றரையில்
பெற்றோம் இன்பம் கோடி
காற்பந்து கரப்பந்து
கைப்பந்து என்றே
சந்து பொந்தெங்கும்
ஆடி விழுந்து - ஆனந்தம்
ஆயிரம் அடைந்தோம்
நளீமியா நறுமலர் வனத்தில்
நடந்தேறாததை சரித்திரத்தில்
நடாத்தினோம் நாம் நல்ல
தொரு விளையாட்டு வாரம்
யாரும் செல்லா எல்லைக்குள்
பந்தடித்து எல்லே விளையாடினர்.
எல்லோரும் ஏறாது மரத்தில்
எட்டியெடுத்தார் மறைத்த காகிதத்தை
நூறு இரு நூறு
நானூறு எண்ணூறு
என்றே ஓடி முடிப்பர்
நெடுந்தூர மரதன் ஓடி
முடிக்க சுருண்டு படுப்பர்
ராணுவப்படை அதில் ஒரு
அசுர நடை தவழ்ந்தே
இலக்கடை இடையில்
பல தடை இதுவன்றோ
அசுர விளையாட்டின்
ஆரம்ப நெறிமுறை
விளையாடி முடிப்பர்
வேகமாய் இலக்கடைவர்
கடந்ததும் கிடையாய்
கிடப்பர் - படையாய்
வாந்தி எடுப்பர்
விநோத உடை அதில்
ஒரு எந்திர நடை
அதற்கு வந்தது புள்ளி;
திறந்து மடை
![]() |
| Minhaj Awardheen |
நாடுகள் ஐந்து எடுத்து
ஆட்களை ஐந்தாய் வகுத்து
நாமங்கள் ஐந்து கொடுத்து
அணிகள் ஐந்தாய் பரித்து
நிறங்கள் ஐந்து அளித்து
அணிகளை வழி நடாத்த
அறுவர் கொண்ட குழுவமைத்து
மின்ஹாஜை தலைவனென நியமித்து
நடாத்தினோம் விளையாட்டு வாரம்
சௌக்கி தலைமையில்
சௌக்கியமாய் முதலிடம்
பெற்றது அணி துருக்கி
அதற்காய் தன்னை சௌக்கி
ஊற்றினான் உருக்கி
இஜ்லான் தலைமையில்
அணி அல்ஜீரியா
இரன்டாம் இடத்தில்
தாண்டவம் ஆடியது.
ரிழ்வான் தலைமையில்
இலங்கை மூன்றாமிடத்தில்
முழுமூச்சாய் இறங்கியதில்
கொண்டதுவெற்றி கண்டதுதிருப்தி
ஜனூஸ் தலைமையில்
பிரான்ஸ் அணி ஒழுக்க
நெறி பேணி சிவக்கும்
வானில் சிறு பட்சியென
சிறகு விரிக்க சிறந்த
முயற்சி தொடர்ந்தது
சின்னவன் சாஜித் தலைமையில்
எகிப்து அணி எதற்கும்
அஞ்சாமல் ஆனந்தம்
பொங்க ஆர்ப்பரித்தது.
![]() |
| Sports Fiesta Comittee |




No comments:
Post a Comment