
தூம்மழையில் - மரந்
தாம் மந்தியது
போம் முறையறிய
பூம் பொழில்
நாம் போமானால்
காண்போம்
பாம் போடு தடாகம்
காம் போடு நனைந்து
கூம் பான அரக்கு
ஆம் பல் அசைந்திடுமே
வேம்பாடு தென்றல்
தேம்பாட தீம்பாவாகுமே
வீம்போடு நாம்பாடும்
தேம்பாவணியும் தீம்பாழாகும்
பூம் பாவை சூடும்
பொற் சலங்கை தீம்பாடும்
ஓசையாவும் பாம்பென
ஓடும் ஓடையிலே
மண்டி போடுமே
சீம்பால ருந்தும்
குழந்தையென போகும்
பொழுதெல்லாம் புதிதாய்
தோன்றுங்காட்சி காட்டிலே
சோகைவந்து சூம்பியவனும்
சோம்பல்வந்து தூங்கியவனும்
மாம்பல் மடக் களிற்று
யானைத் தானை கானில்
காணும் போது தோணும்
சோம்பல் கரையும் சாம்பலென
காணாது போய் - அங்கந்தாதி
பரம்பொருளைக் காண்பான்
தூம் - தூவும்
தாம் - தாவும்
போம் - போகும்
பொழில் - சோலை
அரக்கு - சிவப்பு
ஆம்பல் - தாமரை
வேம்பு - வேப்பமரம்
தேம்பாட - தேன் பாட
தீம்பா - இனிய பா - கவி
தீம்பாழ் - மிக கெட்ட
பூம்பாவை - பூ பெண்
தீம்பாடும் - மதுரமாய் பாடும்
சீம்பால் - குழந்தை தாயிடம்முதல் நாள் அருந்தும் பால்
சோகை - ஒரு வகை நோய்
மாம்பல் - பெரிய தந்தம்
களிறு - ஆண் யானை
தானை - படை
மட - இள
அந்தாதி - முடிவும் முதலும்
பரம்பொருள் - இறைவன்

No comments:
Post a Comment