நல்ல கல்லிருக்கை நான்கிருக்க - நடுவே
வட்ட மேசை யிருக்க
அருகே நான் அமர்ந்திருக்க
மாவிலையை - மழைத்
திவலை பூசி விழ
தீம் மழையில் சொட்டத்
துளிகள் வட்டத்துளியென
கூரை விட்டத்தே விழுந்து
நில மட்டத்திற் தெறிக்க
மேவி யோடும் நீரில்
காவி மண் கரைந்தோட
தெங்கில் காய் தொங்க
தொங்கும் காயில் மழைதங்க
வான் ஒளி மங்க - செவியில்
![]() |
| N M Sajith |
சிந்தும் மழையில்
சிந்தும் இசையும்
சேர்ந்து பறவை
பேச்சரவமாய் செவியில்
வந்தமர்ந்து வாத்தியம்
முழக்குதே!
பூவும் கொடியும்
ஓடும் எறும்பும்
பெய்யும் மழையில்
பையத் தளும்பும்

விளாத்தி மரம்
தங்கிளை பரப்ப
பன்னிற வண்ண
மீனினமோ நீந்தியுலாவ
அன்பிற் குழைந்ந
பாங்கன் , கெக்கிராவை
கட்டுக்கெலியாவ சாஜித்
மனையில் நானமர்ந்து
நற்கவி படைக்கிறேன்.
நெல்லரிசிச் சோறு
இன்னும் என்ன நல்லாகாரங்கள்
எல்லாம் எனக்களித்த
சாஜித்தின் அன்னைக்கு
நன்றிகள் நாலாயிரம்.
கனிவும் ஹாஸ்யமும்
கலந்து குறும்பும்
சில்மிஷங்கள் பிசைந்து
என்னோடு இன்னுமுதாய்
பொழுது போக்கும் சியா,
ராஸி, ஹிஸாமுக்கும்
என்னன்பே சமர்ப்பணம்.
![]() |
| Razi And Hisham |
முற்றும் கடந்து – ஆழக்
கற்று வாழக்கடை பண்டங்கள்
விற்று காலமின்றி வந்தும்
தோட்டம் துரவு நோட்டமிட
காலமின்றி வந்தும்
என்னோடு கனிவாய்
கதைக்கும் சாஜிதின்
தந்தைக்கு என் கௌரவங்கள்
கவை விரிந்து
கிளை முறிந்து
மரம் முதிர்ந்து
பெருந்தருக்களில்
தாவி வளைந்து
தொற்றி ஏறி
பற்றி பிடித்து
பெற்ற இன்பம்
பேரிழன்பம் - ஏறாதோருக்கு
எப்படித் தெரியும்
என் இன்பம்.
கழுத்தளவு ஆழமிது
கண்டபடி போகுமிது
நீரிழுவை நிரம்ப இது
பார்த்திறங்கு பயங்கரமிது
நீந்தாதோர் நின்று
நீராட நிதானம பெறு
வெகுவேகமாய்
போகும் ஓடையிது.
என்றதோர் எச்சரிக்கை
சாஜித் அவன் சொன்னதும்
சிறு தயக்கம் தொண்டையில்
உருண்டை மிதக்கும்.
நீருக்குள் புகுந்து
நீராட துளிமழை
மணி மணியென
மேனியில் விழ
அழகு மயம்
எழில் நயம்
ஓடும் மீன் ஓடும்ஓடையில் என்னை
விட்டு ஓடியது ஆடை
ஓடிய ஆடை ஓடிப்பிடித்து
மேனியில் சூடிக்
கொள்வதற்குள்
நாடித்துடிப்பு விநாடிக்குள்
கோடிக்குள் அடங்கும்.
சாடிக்குள் முளைத்த
செடி அடவிக்குள்
எப்படி பிழைக்கும்
ஆற்றில் குதித்தால்
அப்படித்தானிருக்கும்.




No comments:
Post a Comment