Friday, 16 November 2018

கலாநிதி சுக்ரி



தெரு வழியே வரும் வேளை
ஒரு சலனம் ஒரு சஞ்சலமின்றி
பெருஞ் சாந்தம் பேரமைதியே
நடமாடுவதாய் நான் காண்பேன்
அதுவே கலாநிதியின் வேடம்
பூண்டதை யாதெனச் சொல்லவேன்

குறைகுடம் தளும்பக் கண்டேன்
குறையொளி மின்மினி மின்னக் கண்டேன்
முட்டையொன்றிற்காய் ஊரெங்கும்
கேரும் கோழியைக் கண்டேன் ஆயினும்

தளும்பா நிறை குடம் எங்கும்
காண்கிலேன்
மின்னா நிறையொளி நிலவை
எங்கும் காண்கிலேன்

ஆயிரம் முட்டையிட்டு
ஆர்ப்பரிக்கா அடக்கமுடை
ஆமைதனை காண்கிலேன்
அத்தனையும் சுக்ரி
வடிவிலல்லோ கண்டேன்


நீளச்செல்லும,; நிலத்துள்
ஆழச்செல்லும் வேரை
தரை மேல் நிற்கும்
மாந்தர் காண்பது தகுமோ?

நெடுந்தூரம் நீளும் ஞானத்தை
ஆழப்புகும் அறிவை - தூரப்
போகும் யாரால்தான்
ஆழப்புரிய முடியும்?
என்னால் எப்படி உமை
உணர முடியும்?

பொன்னறிவு புதைந்;த
புதையல் நீர்
நல்லறிவு சமைந்த
படையல் நீர்
சொல்லழகு மிகுந்தவர்
சபையில் நீர்
சொல்லி முடிக்கப் போதா
கவியில் உம்மை

அதானலன்றோ அன்றரொரு
தினம் புகன்றார் புகழ்
வள்ளள் அறிவுத்தந்தை
நளீம் ஹாஜியார்

அளந்து நிறுத்து
உடலெடை எத்தனை
என கணித்து அத்தனைக்கும்
மொத்தமாய் பொன்னைத்
தருவேனே அன்றி

பொற்சிந்தை பொருந்திய
பேரறிஞர் மாமேதை
கலாநிதியை யான்
தந்திலேன் - இனியும்
கேட்டிடாதீர் என்றார்

நளீமியா அரங்கேறி
சிறு அகங்காரமின்றி
சீர் உரையாற்ற
ரீங்காரத் தேனியும் வரும்
உம் பேச்சமுதை பருக.

அதனாலல்லோ உமைக்
கண்ட மறு நொடி
எனக்குள் குடிகொள்ளும்
நிசப்த விடிவெள்ளி

என்னூலுக்கு வாழ்த்துரை
வழங்கி என்னை
நெறிப்படுத்திய உமக்கு
நன்றிகள் கோடி

வெகு காலம் மிக நலமாய்
சுக தேகம் கொண்டு
பல்லாண்டு பன்னூறாண்டு
வாழிய வாழியவே!



No comments:

Post a Comment