காலி வீதியில்............
எட்டாக யான் முறிந்து
பட்டாக யான் கசங்கி
தட்டாக யான் நசுங்கி
பிட்டாக யான் குழைந்து -காய
வெட்டாக யான் நொந்து
கட்டற்று பாயும் காட்டாற்றில் யான்
திட்டின்றி கால்பதிக்கவியலாமல்
தட்டழிபவனாய் யான்
தட்டுத்தடுமாறுகிறேன் பேரூந்தில்
நீலக்கடல் நீளக்கடல்
ஆழக்கடலெனை சூழக்கடல்
தூரத்திடல் ஆங்காங்கே
பச்சையுடல் இச்சைக்கடல்
மச்சைவழி இச்சையேற
கச்சைகிழி கொச்சைமேனி
நச்சைவிட நச்சவனி
பிச்சைபெறவேனும்
அச்சபை போகாமல்
ஆதிமுதல் ஆண்டவன்
காத்தருளிடு வாயோ!
அழித்திடுது நோயோ!
அகுரஸ்ஸை நோக்கி.......
முந்துது பிந்துது கிறுகுது முறுகுது
வருகுது போகுது சறுகுது சாலை
முழுதும், ஓசைபெருகுது, குலை
நடுக்குது மலைவழிபாதையிலே
வளைசுழி வீதியிலே பேரூந்து
போர்வை கந்தூரி ஒலிபெருக்கியோசையால் காது கிழிந்தவை........
அறபோ உறுதோ
தமிழோ தெலுங்கோ
ஆரேனும் தெரிந்தால்
அறிவுறுத்தமாட்டீரோ?!
கூச்சலோசை தானும்
கேட்கிறதே -தோணும்
வாக்கியமோ யாவும்
பாக்கியமென நினைப்பதே பாபம்
இறை கோட்பாடாகிலும்
மறை கோட்பாடாகிலும்
எமக்கேதுமில்லை கவலை
கப்று வணங்கிடலே எம் வேலை
எனவொரு சனக்கூட்டம்
தினமொன்று நடமாடுது
யாரருளிடு வாரோ?
பேரருளாளன் நீயேதுணை
கல்லறையும், கரங்ளை கிழித்லையும் காணும் போது......
பூமாலைதனைச் சூடி
கல்லறையோ -நிறைந்த
சில்லறையோ நேர்ச்சை
பாமாலை தனைப் பாடி -மஞ்சற்
காமாலை தீர மரித்த
மானிட சடலத்தை
கோமானென கருதி
சீமானென தம்மைசிலர் கருதி
சீருடலை சீரழித்து
சிந்தினரே செங்குருதி.
பகலாகாரம் பகிரும் நேரம்....
வயிறாற நெல்லரிசிச் சோறாம்
நாவூற பல்லுரசி சுவைக்க
கோழிக்குழம்பாறாம்
பாலூறி பின் தயிரோடு
பகலுணைவை பந்தியிலே
ரஷாத் நாநாவுடன் தோழன்
ரிஸ்னியுடன் சகபாடி ரினாஸின்
மனையில் புசித்தோமல்ஹம்துலில்லாஹ்
தீயினில் கோழி சுட்டிடும் தருணம்....
முரட்டுச்சிரட்டை திரட்டி
கொழுத்தியணைத்து
அதன் சூட்டில் கோழி
சுட்டிட பட்டிடும் பாட்டில்
சுட்டிடும் விரல் -மதியில்
பட்டிடும் மனையாள் சமையல்
இருநாட்கள் கழிய பெருநாளென
கொண்டாடும் கந்தூரி முடிய-கப்றில்
மன்றாடும் மதிகெட்ட மக்கள்கலைய
நாமும் கலைந்தோம் கவலையில் உறைந்தோம்
No comments:
Post a Comment