அல்லி மடல் மேல் பொய்கை
நீர் ஒட்டுதில்லயே!
ஏகாந்த ஆனந்தத்தில் நெஞ்சம்
எல்லை கொள்ளுதில்லையே!
தென்றலும் குளிர்நீரும் கைலாகு
செய்து வெயிலோடு கலந்து
மின்னி மென்னலையாய் தவண்டு
எனை நாடி காலடி தேடி வருதே
கலைந்து போனதே நாரை
அலைந்தோடி வருதே காய்ந்த புற்கீரை வட்டலை வடிவோடு
அரவம் அதை அழைத்து வருதே!
குழுமிய மஞ்சு கலைந்து
அஞ்சுது எமைக்கண்டு
கொஞ்சுது தென்றல் எனை
குளிர் கொண்டு
நாசுவைக்க அது புளிக்க
அருகிருந்த சகபாடி
சிலர் குரைக்க, மெல்ல
நான் கூழாங்காய் கொறித்தேன்.
குளத்தே அல்லி மலர் கூம்ப
விடிந்த பொழுது முடிவதனை
திடலேறும் பசுக்கல் புகல
பட்டியோடு போகிறான் இடையன்
நிழல் விருட்சம் நெடுத்து
நீண்டு இருக்க அதன்
அடுத்து செம்மண் வீதி
தொடுத்திருக்க
புதுத்தோழர் என்னருகே
துணையிருக்க, நான் கவியெழுதி
வினைபுரிய கங்குல் கலக்குது
மெல்ல மங்குல் செல்லுது
இவ்வெழிலை என் தொழில்
கவியிற் சொல்ல, ரசிகன்
புவியில் இல்லை, கல்லெடுத்து
மெல்லெடுத்து எறிய
அதன் ஓசை என் செவிசெல்லுதே
போதும் நிறுத்து போவோம் என்றதும் புறப்பட்டனர் பஸ்மின்
பஸ்மிர் சப்ராஸ் ஹய்ஸாம்
பொய்கை -குளம்
மஞ்சு - மேகம்
கங்குல் -இரவு
மங்குல் -பகல்
2014.06.19
No comments:
Post a Comment