கர அணைப்பில்
அரவணைப்பில்
உடல் பிணைப்பில்
காதல் பிணைப்பில்
கொஞ்சு மொழியில்
நெஞ்சு வழியுதே
பஞ்சு கிழியுதே
நஞ்சு அழியுது
மஞ்சு வளையுதே
தந்தை மறைக்கும்
தாயுறவு கசக்கும்
தங்கையுறவு புளிக்கும்
வீட்டு நினைவோ எரிக்கும்
காதலென்கையில் கரங்கள் அணைக்கும்
காமவரங்கள் கிடைக்கும்
கால் நொடியில் உணர்வு சுரக்கும்
காலம்போக குழந்தை பிறக்கும்
காலமுழுதும் உலகம் பழிக்கும்
பாரெங்கும் காதல் மணக்கும்
மஞ்சு -மேகம்
No comments:
Post a Comment