Sunday, 26 February 2017

கைசேதம்

கர்சித்து அச்சுறுத்தி
காடாளும் காட்டரசச்சிங்கம்
தன் வயிற்றில் அக்கினி பரவ
பசிப்பிணி தொற்றி பட்டினி
கிடந்தே மரித்து மாயும்

தெருவோடை எங்கும்
குப்பைக்கூடை எங்கும்
துர்வாடை வீசுமிடமெங்கும்
பீடை தொற்றி கழிவாயும்
இழிவாயும் அலையும்
நாய்யாவும் ஆட்டுமச்சம் புசிக்கின்றன

பருத்தி மெத்தை பட்டு மஞ்சம்
குளிரப்பொருத்திவைத்த
கோட்டை கோபுரத்திலும்
வீட் விறாந்தையிலும்
தூங்கித்தொலைக்கிறான்
நிலைத்தூக்கமதை தூங்கியே மறக்கிறான்

நாளையொரு நாள்
நாலாறு பேர் சூழ்ந்து சுமந்து
நாலடி ஆழ ஈர்நாலடி நீள
குழிவெட்டி அவனை
குளிப்பாட்டி குழியில் வைப்பர்

பருத்திப்பட்டு மெத்தை
போர்வை யாவும் மண்தான்
ஈற்றில் மண்ணாய் ஆவான்
ஈராண்டில் மணலாய் ஆவான்.

No comments:

Post a Comment