Sunday, 26 February 2017

மரணமென்ன முடிவு?

பெரு உலகு படைத்து
மிக இலகாய் அமைத்து
அகிலம் ஆளும் வல்ல
நாயனுக்கே புகழனைத்தும்

வையத்து வாழ் மக்களுக்கு
வைகறை ஒளியாய்
வழிகாட்டிய வள்ளல் நன்நபி
மீது சலவாத்துச்சொல்லி

வாவி போல் கவி சொல்ல
புவி வெல்ல நல்லகவி
நான் பாடவந்தேன் சுபசோபனமாய்
சுவனத்து முகமன் அஸ்ஸலாமு அலைக்கும்

கருவறை குழந்தை பிறப்பு
மண்ணறையில் மனிதன் இறப்பு
இம்மை மறுமையின் திறப்பு
இதுவே ஆண்டவன் சிறப்பு

நேற்று நாம் ஜனனம்
நோன்பு நோற்று உண்டோம் இரணம்
நாளை நாம் நடுநிசியில் மரணம்
மறுமையில் ஏன்?  சலனம்

உண்டுடல் கொளுத்து
பசைபல பூசியுடல் வெளுத்து
அகந்தை கொண்ட எம் எழுத்து
மறுமையில் பணிப்பான் இவ்வுடலை கொழுத்து -அதன்முன்
மண்ணறையில் நாறும்
நம்முடல் புழுத்து

மரணம் முடிவல்ல என்பதை
மனதில் என்றும் அழுத்து
நினைவிலென்றும் நிறுத்து
பாவங்களை வெறுத்து

நல்லவை புரிந்தால் நாளை
சுவனம் வந்துவிழும் வாயினில்
பலாப்பழம் பழுத்து -தீயவை புரிந்தால் வந்துவிழும்
மாமிசம் புழுத்து

மரணமதனை மறந்து
மாயைதனில் விழுந்து
போவோம் கப்றுகளில் அழிந்து
உலக மகிழ்வை மறந்து

கொடுப்போம் ஈகை
ஒரு உளுந்தேனும் கொண்டு
கொடுப்போம் விருந்து -இதை
இறைவா பொருந்து

மரணமென்ன முடிவு?
மரணமல்லோ மறுமையின் விடிவு
சுவனமென்ன? நரகமென்ன?
அதுவே நம்மிறுதி முடிவு

No comments:

Post a Comment