#பன்மைச்சமூகத்தில்_முஸ்லிம்கள்
#டாக்டர்_ஃபஸ்லுர்ரஹ்மான்_ஃபரீதி -ஆங்கிலத்தில்
#சேயன்_இப்றாஹீம் -தமிழில்
யாவரும் இந்நூலை கற்றறிதல் காலத்தின் கட்டாயக்கடன். இஃது இந்திய முஸ்லிம்களை கருவாக மனத்தில் இருத்தி இஸ்லாத்தை அதனுள் பொருத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
இலங்கை போன்ற பன்முக காலசார பன்மை சூழழியல் முஸ்லிம் வாழ்கை முறைக்கு முற்றிலும் இந்நூல் உகப்பாக இல்லாது போனாலும் முழுமொத்தத்தையும் புறமொதுக்கிடல் தகாது.
இந்திய பல்கலாசார பன்மொழி பல்சாதியங்களின் பலதரப்பட்ட இன்ங்களின் குரூரமுகங்கள் தலைவிரித்தாடும் இந்தியதுணைக்கண்டத்தில் வாழும் முஸ்லிம்கள் தேசத்தின் பங்காளிகளாகும் அஃதேகண்த்தில் நேசத்திற்குண்டான இஸ்லாத்திற்கு சேதத்தினை உண்டுபண்ணாமலும் வாழ்தல் எவ்வாறு? என ஆராய்கிறார்.
இன்னும் கால இட சுழ மாறுதல்களுக்கிணங்க முற்றாக மாறி #தக்கணப்பிழைத்தல்_தகாது_அழிதல் எனும் #டாவின்ஸி கூற்றுக்கேற்ப #பாம்பு_உண்ணும்_ஊருக்கு_போனால்_நடுத்துண்டு எனக்கென்று கேட்டுத்தின்னும் நிலையில் சீவிப்பர்கள் அல்ல இந்த முஸ்லிம்கள்.அவர்களுக்கென சில வரைமுறைகள் வழிபாட்டு முறைகள் அவசியம்செய்ய வேண்டிய கிரியைகள் என ஏகப்பட்ட விதிகளுக்கும் கட்டுக்கோப்பான சமூக சுமூக ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டே அவர்கள் வாழவேண்டும்.ஆனால் முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் தேசத்தில் இவையாவும் நடைமுறை அசாத்தியமே.
ஆனாலும் விட்டுக்கொடுக்க இயலுமான சில அம்சங்களை விடுத்தும். விடுவது உயிரை விடச்சமானமென காணும் அம்சங்களை எடுத்தும் பிறமதகலாசார இன மக்களுடன் இன்முமாக வாழ்தலே பன்முக முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரேவழி எனவும் நவில்கிறார்.
இதற்கப்பாலும் #எம்மதமும்_சம்மதம் எனும் #மன்னர்_அக்பரால் தாவறாக உருவாக்கப்பட்ட கோட்பாட்டை கொண்டுவருதல் முற்றிலும் பொருத்தமற்றது.யாரென்ன சொல்லி என்ன செய்ய? அக்பர் பதவியேற்றது பன்னிரண்டு வயதில். தந்தை #ஹுமாயூன் காடுமேடென நாட்டைப்பிடிக்க நாயாய் அலைந்தார். தந்தையினதும் தாயினதும் அரவணைப்பின்றி சிறுபராயம் முதற்கொண்டு இந்துஒருவரின் வீட்டில் இந்துக்கலாசாரத்துடனே இணைந்தே வளர்ந்தார்.பின்னாளில் நிறுவப்ட்ட மொகலாயத்தை பலபோர்களுக்கு பின் மீண்டும் மொகலாயத்தை நிலைநிறுத்தினார். #தீனே_இலாஹியையும் நிறுவினார் இவரைகுற்றம் சொல்லி யாரையும் குறைகாணமுடியாது.
இதெல்லாவற்றிகப்பால் நாட்டை மதச்சார்பற்ற நாடாக சமாதான நாடக
இந்திய நாட்டை மாற்றுவதென்பது முஸ்லிம்களை இந்துக்களாக்குவதென்று இந்திய பிரதமர் #மோடி_மோசடி) யும் #RSS,#BJP #கரசேவர்கள் சிந்திப்பது வடிகட்டிய பேய்த்தனமன்றி வேறொன்றாக இருப்பதற்கு எவ்வித நியாமும் இல்லை.
இதெல்லாவற்றையும் கடந்து இன்னும்பல அரிய தலைப்பிற்கேயுரிய பல கருத்துக்களையும் #பன்மைச்சமூசத்தில்_முஸ்லிம்களின்_சுமூக_வாழ்விற்கான_சாத்தியப்பாடுகளையும் நூலாசிரியர் ஆரைகிறார்.
நூலை தந்துதவிய என் சகபாடி #Azhar_gafoor இற்கு எனது நன்றிகள்.
No comments:
Post a Comment