Monday, 30 January 2017

பயணப்பலன்கள்

பயணி பின் அவனிதனை
             கவனி
மறந்திடு சொற்பமுன் பழகிய
             தரணி
பலனைந்து வரும் உன்னை
             அணுகி
மயலொழுகி மனதில் பதியும் வயலழகு
               கழனி

உளக்கவலை முழுக்கவலை
          விழித்திவலை
உள அழுக்கு வலையாவும் நீக்கிடும்
            அழகுமலை
பொருளுனக்கு பொதியுனக்கு
            மதியுனக்கு
அருள் நிறை ஒழுக்கமுனக்கு-       மனிதம்கொண்ட
           மனிதன்
என்றும் தோழன் உனக்கு

அவனி/தரணி-உலகம்
மயல்-அழகு
கழனி-வயல்
திவலை-துளி

தீவானுஸ்ஸாபியி

No comments:

Post a Comment