Monday, 30 January 2017

அனர்த்தம்

திடலது கடலது பெருக்கு
ஊரிற் புகுந்து உடல்கள்
சடலங்களாய் ஆவதை
இறைவன் காத்திடட்டுமே

கடுங்காற்று வீச நிழல் தரும்
எழில் மரம் எரியும் பின்சரியும்
அணர்த்தம் என்றால் என்ன
வென்று  அக்கணம் புரியும்

கட்டுமரம் ஏறி கடல் செல்ல
கடும் காற்று வீசி கவிழமுன்
கட்டுமரம்-அணர்த்தம் பற்றி
அறிவோம் நற்கருமம்புரிவோம்

மழைவெள்ளம் பெருக
காட்டாறு வீட்டுக்குள்
புகுமுன் நாம் காவல்
அரண் புகுவோம்

தீப்பொறி கதிரவன் எரிக்க
காடு பற்றி எரியும்
நாடு வற்றி வறளும்
விபத்திலிருந்து விலகுவோம்

No comments:

Post a Comment