Thursday, 19 January 2017

சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்

விறுவிறுப்பான நடை அதே நேரத்தில் ஆக்கபூர்வமான புள்ளிவிபரவியலின் அடிப்படையில் நம்பத்தகுந்த தரவுகளுடன் ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 1900-1945 வரை எனும் இந்நூலை முஹம்மது சமீம் 
அவர்கள் எழுதியிருக்கிறார்.

முஸ்லிம்கள் தேசியவிடுதலைக்கு பங்காற்றவில்லை எனும் குற்றச்சாட்டிற்கான காரணம் என்ன?
சிங்களவர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டமைக்கான காரணம் என்ன?

தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டமைக்கான காரணம் என்ன?

சிங்களவர்கள் வரலாற்றிற்கும் தமிழர்கள் இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவேளை முஸ்லிம்கள் தமது சுயபொருளாதாரத்திற்கு முக்கியம் அளித்தற்கான காரணமென்ன?

சிங்களவர்கள் சிங்களமொழிமூலம் மேற்படிப்புக்களையும் உயர்பதவிகளையும், தமிழர்கள் ஆங்கிலக்கல்வியையும் அரசபதவிகளையும் கோரி நின்ற வேளை முஸ்லிம்கள் தாய்மொழிமூல ஆரம்பபாடசாலை கோரியதன் பின்புலமென்ன?

கண்டிச்சிங்களவர்கள் சமஷ்டியையும் கரையோரச்சிங்களவர் சுயாட்சியையும் தமிழர்கள் சிங்களவருக்கும் தமிழருக்கும் சமபங்கு பிரதிநிதித்துவத்தையும் கோரிநின்ற வேளை முஸ்லிம்கள் ஆங்கில அரசுக்கு ஆதரவளித்ததன் நோக்கம் என்ன? அத்தோடு மாக்கான் மாக்கார் அவர்களுக்கு சேர் பட்டம் வழங்கக்கோரி வெள்ளையரிடம் மனுக்கொடுத்ததென்ன?

கரையோரசிங்களவரிடையே கராவ, சலாவ எனும் வகுப்புவாதம் இருந்தவேளை கண்டிச்சிங்களவரிடமும் ஒருவகை வகுப்பு வாதமும் தமிழரிடையே வெள்ளார் எனும் சாதித்துவ வாதம் நிலவிய வேளை அப்பொழுது 5% ஆக இருந்த மொத்தமுஸ்லிம்களும் சோனகர்,மலையேர்,மேமன்கள்,
ஹம்பயாக்கள் என பிரிந்ததன் நோக்கம் என்ன?

1915-சிங்கள முஸ்லிம்  கலவரத்திற்கு முஸ்லிம்களே காரரண காரிய கர்ந்தா என பொன்னபல இராமநாதன் வீண்பழிசுமத்தியவேளையில்
வாய்பேசா மடந்தைகளாய் அரசியல் அநாதைகளாக முஸ்லிம்கள் மாறியதன் விளைவென்ன? போன்ற இன்னும் முஸ்லிம் தனியார் சட்டம் என அடுக்கிக்கொண்டே செல்லும் எழுத்தாளர்  கண்டிக்க் வேண்டிய இடங்களில் இன மத சாதி பேதமின்றி கண்டித்தும் தட்டிக்கொடுக்க வேண்டிய இடங்களில் தட்டிக்கொடுத்தும். பேசுகிறார் ஆனால் சிங்களவர்களாலும் தமிழர்களாலும் தட்டிக்ழிக்கப்பட்ட சமூகம் முஸ்லிம்ள் என்பதனையும் சூக்குமமாக சுட்டிக்காட்ட தவறவுமில்லை

No comments:

Post a Comment