பெருங்கடல் மீனும்
நல்ல புளியாணமும்
வெண்டிப்புளிச்சாறும்
நல்நெல்லரிச்சோறும்
வண்ணநடைபோடும்
அன்னநடை வாத்தும்
தண்ணீர் நாடும் தாராவும்
மண்ணை கிளறும் கோழியும்
தரை கொத்தி உரமிட்ட
வீட்டு மரத்தோட்டமும்
வீட்டு மாதுளையும்
கொய்யா முதலிய
நாட்டு வாழையும்.
என்னூரில் இம்முறை
விடுமுறையில்
உண்டு தின்று
உருண்டு திரண்டிடுவேன்
No comments:
Post a Comment