Wednesday, 18 January 2017

ரிஸ்க்

வயிற்றில் வெறுமையோடு
வறுமை வந்தாடும் -நீ
பொறுமை யோடு
பறந்து     போராடு
உனைசேர வேண்டியது
உனையன்றி வேறெங்கு போம்

வண்டென்ன நண்டென்ன
இறைவன் படைத்தவை
கண்டுண்ண தரணி எங்கும்
உணவு உண்டு -ஏன்
அலைய வேண்டும் யான்
கவலை கொண்டு

உண்டு மகிழ யான்
கண்டு கொண்ட -இரைதீன்
பண்டம் யாவும்
அண்டமெங்கும் கண்டமுழுதும்
உண்டு, அதனை யான்
உண்டு முடிக்க
எனக்கு எத்தனை
சொண்டுதான் உண்டு?

ஆண்டவன் அருள்
எனக்கென்றும் உண்டு
அதை மனதில் எண்ணி
அயராது தேடலுண்டு

வல்லவன் அளித்த வாழ்கை
எண்ணிநான் விரித்தேன் இறக்கை
பறக்கையிலே வடக்கையும்
கிழக்கையும்   கடக்கையிலே
ஆண்டவன் அளித்தான்
என் ரிஸ்க்கை

சக்தி மிக நாயனிடம்
பக்தி மிக கேளு -தேடல்
யுக்தி கொண்டு தேடு
அருளாளன் அருளிட்டான்
பொருளாளன் பொருளிட்டான்
எனையாளும் நாயன் என் பங்கை
என்றோ எழுதிட்டான்

அறபியில் -أبو بكر العدني ابن علي المشهور
உதவி -ஆசான் இம்தியாஸ்

No comments:

Post a Comment