Thursday, 19 January 2017

மக்கு

அவனை அவனே `மக்கு' என்று
மார்தட்டிச்சொல்வான் ஏனென்றால்
மக்கள் எல்லாம் மக்கென்றே இவனுக்கு மறு நாமம் சூட்டிவிட்டார்கள்.
கடும் பிரளி கட்டுக்கடங்காதவன்
யாரிவனை கவனிப்பார் என ஆசான்களெல்லாம் கைவிரித்து கனகாலமானது. இவன் வருங்காலம் என்னவாகும் என பெருங்கவலை பெற்றோருக்கு.
இப்பொழுதுதான் இவன் தந்தை காதில் விழுகிறது "மேலதிக வகுப்புக்கு அனுப்பினால் என்ன ?"
சீ.எஸ்.சீ எனும் இடத்தில் மேலதிக வகுப்பு நடத்துகிறார்களாம்.

அதனை நிர்வகிப்பது கல்முனைக்குடியில் வசிக்கின்ற எருக்கலம்பிட்டியை தாய்மண்ணாய் கொண்ட வன்னிறாஸ் ரயிசுதீன் ஏ சலாமாம். சரி அங்கு கொண்டுபோய் இவனை விட்டால் என்ன என்று இவன் தந்தை மனதில் எண்ணம் எழுந்த கையோடு கூட்டியும் வந்துவிட்டார்.
கூட்டிவந்ததோடு விசாரிக்கவெல்லாம் இல்லை ஒப்படைத்துவிட்டு போதாக்குறைக்கு "கண்ணு மட்டும் இருக்கட்டும் மத்ததெல்லாம் உரிச் உப்பு தடவுங்க சேர்" என சொல்லிவிட்டுத்தான் விசாரிக்கிறார்.கற்பிட்டியிலே நின்றுபிடிக்கும் பெறுபேறுகளை பெறும் கல்விக்கூடம்  என்ற பதில் வர வீடு சென்றுவிட்டார்.

இனி கற்றலில் நாட்டமில்லா இவனை பிடித்து வைத்து மெல்லப்பாடம் சொல்லிக்கொடுத்து கணிதம்,விஞ்ஞானம்,தமிழ்,வரலாறு,புவியல், எல்லாப்பாடமும் எடுத்து ஏதும் மீதியின்றி எல்லாம் சொல்லிக்கொடுத்து.தமிழே தெரியாதவன் தமிழின் தாசன் ஆனான்.எதைச்சொன்னாலும் விஞ்ஞான விளக்கமுண்டா என விவரணம் கேட்டான் .
   தமிழரசன் என புனைப்பெயரையும் சூட்டி கவி எழுதி கட்டுரை எழுதி மேடையேறிநாணம் நீக்கி நிமிர்ந்து நிற்கும் நிலைக்கு வந்து சேர்ந்தான்.

வாசிப்புத்தான் இவன் இணைபிரியா
தோழன். புலவன் பரம்ரை இவன் ஆனால் புதைந்திருந்ததை அகழ்ந்தெடுக்க வனனிறாஸ் எனும் ஆசான் வந்து சேர்ந்ததோடு நில்லாது நளீமியா நத்தவனத்திற்கு செல்ல நல்லவழியும் சொல்லிக்கொடுத்தார்.

என்னாசான் என்றே அழைக்கும் இவன் எங்கு போனாலும் ஆசானின்
இவ்வரிகளை மறப்பதே இல்லை

சதிநின்றாட வெறிகொண்டோடு உன்வெற்றிப்பாதையில் வேங்கை வந்தால் வெட்டிப்போடு தலைதுண்டாக
பேயும் நரியும் விரண்டோட
மதிகொண்டு நீயாடு
                  -வன்னிறாஸ்

இவ்வாசான் கல்வித்துறையில் இருந்து பிரிந்து கட்டாரிற்கு சென்றுவிட்டார். இவரின்றி இன்னும்பல  இவன்போல் மக்குகள் (மாணவர்கள்) இருக்கிறார்கள் இவர்களையும் செதுக்கி சிற்பமாக்க இலங்கை மண்வரவேண்டும் மீண்டும் ஆசிரியம் புரியவேண்டும்.

இவ்வாசானுக்காக இவன் எழுதிய கவி

எம்மை பாராட்டி சீராட்டி
எழுத்துக்களால் தாலாட்டி
அறிவுச்சுனையில் நீராட்டி
எம்மை வளர்த்த ஆசானை
வாழ்த்தி வரவேற்று போற்றி
புகழுதல் எம் நெடுநாள்கடன்
மெழுகெனக்கரைந்து ஒளியென
மிளிர்ந்து ஒளிர்ந்து அறிவு தந்து

கல்லெனக்கருதும் சிறாரை
சிற்பி என தன்னை ஆசான் கருதி
அறிஞன் என வடித்து உலகாள
வைத்தவரைவாழ்த்திடல்
எம் நெற்றிக்கடன்
அந்தியும் அந்திக்கு முந்தியும்
அதற்கு பிந்தியும் ஓயாது
அயராது உழைத்த
ஆசானுக்கு வாழ்த்துக்கூறல்
அவசியம் என சோதரரே சிந்தியும்

இரணம் எது?கிரணம் எது?
பிராணம் எது? புராணம் எது?
எதுவென பகுத்தறிவை தொகுத்து
வகுத்தல் பகுத்தல் எதுவென
எமக்களித்த ஆசானை போற்றிடுவோம் வானுயர ஏற்றிடுவோம்.
இது என்னாசான் ரயிசுதீன் அவர்களுக்கு சமர்ப்பணம்

இங்கனம் -இவன், மக்கு, தமிழரசன்
இன்றைய மன்னாரமுது அஹ்னப்

No comments:

Post a Comment