கற்றார் கலைஞர்
உற்றார் உறவினர்
சுற்றத்தார் சூழ உள்ளார்
கூடிவந்து கோடி உதவி
உற்றார் உறவினர்
சுற்றத்தார் சூழ உள்ளார்
கூடிவந்து கோடி உதவி
செய்தாலும் -எமை
தேடிவந்து மாடிமனை
கட்டித்தந்தாலும்
நாம் நீடூழி வாழவேண்டும்
என நெஞ்சத்தால் நினைக்கும்
எம் பெற்றோருக்கு ஈடாகுமோ?
தேடிவந்து மாடிமனை
கட்டித்தந்தாலும்
நாம் நீடூழி வாழவேண்டும்
என நெஞ்சத்தால் நினைக்கும்
எம் பெற்றோருக்கு ஈடாகுமோ?
வண்ண வண்ண ஓடு
கவிழ்த்தி எம் எண்ணம்
சொல்லும் வண்ணம் -பல்
வர்ணம் பூசி வீடு கட்டினாலும்
அங்கு பெற்றாரில்லையெனில்
அது இன்பவீடாகுமோ?
கவிழ்த்தி எம் எண்ணம்
சொல்லும் வண்ணம் -பல்
வர்ணம் பூசி வீடு கட்டினாலும்
அங்கு பெற்றாரில்லையெனில்
அது இன்பவீடாகுமோ?
உலகெலாம் உலாவி வந்து
உள்ள நாடுகள் சுற்றிவந்து
அவனி எங்கும் பவனி வந்து
நல்ல நாடு எதுவென தெரிவுசெய்து
உள்ள நாடுகள் சுற்றிவந்து
அவனி எங்கும் பவனி வந்து
நல்ல நாடு எதுவென தெரிவுசெய்து
நாம் குடிமனை அமைத்தாலும்
நம் பெற்றோர் இல்லையேல்
அது நண்மை பயக்கும்
நாடாகுமோ?
நம் பெற்றோர் இல்லையேல்
அது நண்மை பயக்கும்
நாடாகுமோ?
எம்மை தொட்டிலில்
வைத்து ஆட்டி
கட்டிலில் கிடத்தி
புட்டி பால் ஊட்டி
விட்ட தாயையும்
வைத்து ஆட்டி
கட்டிலில் கிடத்தி
புட்டி பால் ஊட்டி
விட்ட தாயையும்
சின்னவிரலில் மெல்ல
நெட்டி முறித்து
தொட்டிலில் வைத்து
சோறூட்டிய தந்தையையும்
நெட்டி முறித்து
தொட்டிலில் வைத்து
சோறூட்டிய தந்தையையும்
கொட்டும் மழை ஒழுகும்
சுட்டெரிக்கும் வெயில்
உள்ளே தழுவும்
ஆட்டுக்கொட்டிலில்
பெற்றோரை இட்டால்
நாம் பிள்ளைகளாவோமா?
சுட்டெரிக்கும் வெயில்
உள்ளே தழுவும்
ஆட்டுக்கொட்டிலில்
பெற்றோரை இட்டால்
நாம் பிள்ளைகளாவோமா?
No comments:
Post a Comment