விரல் நீட்டிக்
காட்டிய போதெல்லம்
வாய்விட்டு
கேட்டபோதெல்லாம்
கேட்டதையும் காட்டியதையும்
வாங்கித்தந்துவிட்டு இன்னும்
என்ன வேணும் நீகேளு - வாங்கித்
தருகிறேன் நீவைத்து விளையாடு
என செல்ல வெல்லமாய்
மெல்ல மெல்லமாய்
வீடு செல்லும் வரை
சொல்லி சொல்லி
எனை அள்ளி அணைத்து
என் செல்ல மகனே என
சொன்ன உத்தமனே
எனை- பெற்றவரே
அள்ள அள்ள குறையாது
மெல்ல மெல்ல சுவை குன்றாது
கள்ளமில்லா வெள்ளை
உள்ளமுள்ள கொள்ளை
முல்லை போல் உள்ளவளே!
நல்ல சுவைச்சோறு ஊட்டியவளே!
இன்சுவை சாறு புகட்டியவளே!
என் அன்னையவளே!
தினம் தினம்
அனுதினம்
புதுப்பபுது
புதினம் காட்டி
வெள்ளை நிலா காட்டி
கொள்ளை சோறூட்டியவளே!
சொர்க்கத்துக்கே என்னை
அழைப்பவளே!
நனழுததும் நீயழுதாய்
நான் நகைத்ததும் நீநகைத்தாய்
நான் பதைத்ததும் நீபதைபதைத்தாய்
என்னை நீ பிரதிபலித்தாய்
என் அன்னைத்தாய் -நான்
என்ன செய்வேன் என்றும்
என் அன்னைக்காய் -உனக்குநான்
என்றும் தென்னைக்காய்
தொட்டில் ஆட்டி
தூக்கம் தந்த தந்தைக்கும்
மடியில் கொண்டு
பாலூட்டிய அன்னைக்கும்
ஆயுள் முழுதும்
அடிமையாய் கிடப்பேன்
அன்பொழுக காலமுழுதும்பணம்
அள்ளி இறைப்பேன்
மெல்லுதல் -மென்று தின்னுதல்
No comments:
Post a Comment