மனிதம் அழப்போகிறது -இப்போது
அலப்போ விழப்போகிறது -நீதிநியாயம் எப்போது
எழப்போகிறது
அலப்போ நீ அழப்போ
விழப்போ எழப்போ
தொழப்போ எனக்கு
முழுப்பணம் போதும்
நீ எக்கேடு கெட்டால்
எனக்கென்ன?
நீ எப்பாடு பட்டால்
எனக்கென்ன?
என எண்ணும் விளக்கெண்ணெய்கள்
இருக்கும் வரை மீண்டும்
எப்போது அலப்போ எழப்போகிறது
நீதிநியாயம் எப்போது எம்கையில்
தவழப்போகிறது
தப்போ தவறோ செய்பவனை
தவறியும் தப்பிக்க விடாமல்
துப்பறிந்து தண்டிப்பேன் என
செப்பி தப்பிக்கும் நீதி நப்பி
ஐநா முகத்தில் கரி அப்ப
எம்மில் எவருமில்லையே
அரக்கண் எல்லாம் கூடி
அறபுலகின் ஆண்மைதனை
அடக்கிவிட்டான் -அகக்கண்
இருக்கிறது புறக்கண் இருக்கிறது
என மார்தட்டும் மாலைக்கண்
அறபுலகே நீ மட்டும் குரக்கன்
மாவூற்றி கூழ் குடிக்கிறாய்.
பாவையரும் பூவையரும்
பாமரரும் படும் இடுக்கண்
களைய நீ மட்டும் என்ன?
உன் இமைக்கண் திறப்பதுண்டோ
ஆட்டைக்காக்க ஓநாயிடமும்
முட்டை காக்க பாம்பிடமும்
தஞ்சம் கேட்டாயே
தலையற்ற அறபுலகே
அலப்போவில் அழுத கண்ணீர்
துடைக்க எவருமில்லை
தொழுது வணங்க பள்ளி இல்லை
பொழுதுவிடிய படுத்துறங்க
ஒரு குடிலில்லை -இதனை
எழுதித்தொலைக்க எந்த
ஊடகமுமில்லை -ஆலம் விழுதாய்
வளர்ந்த ஆயுதங்கள் ஓய்ந்தபாடில்லை
நக்குண்டு அலையும் நாய்கள்
உள்ளவரை சிக்குண்டு நிம்மதியாய் வாழ
வாய்ப்புண்டா மகளே
நிர்க்கதியானவருக்கு
போக்குண்டா மகளே
நங்கையரும் தங்கையரும்
மங்கையரும் சங்கையரும்
தாக்குண்டு அழிவாரோ மகளே
தம்மானம் தன்மானம் காக்க
தூக்குண்டு சாவார் பகலே
மெய் வாக்குண்டானால்
நல் நோக்குண்டானால்
நெறிபிசகா போக்குண்டானால்
நெடும்பெரும்
பொறுமையுண்டானால்
எமக்கு வெற்றியுண்டு
வாகையுண்டு சூடிக்கொண்டு
விழும் குண்டு-அதில் நாம்
கொலையுண்டு சுவனம்
கண்டு மகிழ்வோம்
தோழா நீ அலப்போ எழப்போ
அலப்போ எழ நீ தொழப்போ
அலப்போ எழ பிரார்தித்து அழப்போ
களைப்போ உழைப்போ இன்றி
ஒருக்காலும் அலப்போ எழப்போகாது அதனால்நீ தொழப்போ
https://m.youtube.com/watch?v=9Y8TrBFSD-U
No comments:
Post a Comment