Thursday, 22 December 2016

பாவக்கறை நீக்கிடு


உலகெலாம் போற்ற
உன்னதமானவரே
உமைக்காணாத
யாமெலாம் உம்மாணவரே

ஞானச்சுடரை அறிவுக்கரையை
நாம் கண்டிட செய்தவரே
ஞானபிதா நளீம் ஹாஜியார்
செங்கமல செம்மலே

யாம் உமைக்காணுமுன்னே
நீர் மரித்தீர் மரணத்தோடு
சிரித்தீர் நற்பெயரை
நாடெங்கும் விரித்தீர்

உம்புத்திரரையாவது காண்போமே
என்று கனா யாம் கண்டிட
கனவும் பலித்தது உம்
முதல்ப்புதல்வன் முதல்வன்

இல்யாஸ் ஹாஜியாரை
இல்லத்தில் கண்டேன் -உயிர்
இல்லாமல். இல்லாமல்
போனது இன்பமெல்லாம்

உம்மைந்தன் மரணத்தால்
உம்மையே உம்மகன்
உருவத்தில் கண்டதால்
உம்மீது காதல் கொண்டதால்

மானெலாம் மிரண்டிடும்
வானெலாம் வளைந்திடும்
கானெலாம் கனன்றிடும்
தேனெலாம் கசந்திடும்

உம்மைப்போல் உம்சேய்
இல்யாஸ் ஹாஜியாருக்கும்
இம்மையும் மறுமையும்
நண்மை கிட்டி வெம்மை இன்றி
தண்மை கொண்டு செம்மைக்கம்பளம் விரித்து
சுவனத்தில் நடந்திடட்டும்
உம்மை கண்டிடட்டும்

இறையருளும் நிறைபொருளும்
கொண்ட இல்யாஸ் ஹாஜியாருக்கு
இறைவா அருளிடு சுவனம் நுழைய
கதவினைதிறந்து வழிவிடு
பாவக்கறை நீக்கிடு
பாரெலாம் இவருக்கெனபிரார்த்திடு


No comments:

Post a Comment