சங்கார மழை பெய்யலாம்
அலங்கார மலர் கொய்யலாம்
ரீங்காரத்தேனி இரையலாம்-ஆனால்
அகங்காரம் இறைவனுக்கே
நள்ளிரவை மின்னல் கிழிக்கலாம்
புள்ளினம் விண்ணில் பறக்கலாம்
புள்ளிமான் மண்ணில் நடக்கலாம்
இவையெல்லாம் ஆண்டவன்
அள்ளி இறைத்த கொடை
நல்ல கனி பழுக்கலாம்
நல்ல பனி வழுக்கலாம்
பாழ் உடல் புழுக்கலாம்
முழுக்க முழுக்க இறையருள்
அருள் பல தந்த இறைவனை
இருள் பலதிசை சூழ
அறையில் இருந்து அழுது
புலம்பி இறைஞ்சுவோம்
No comments:
Post a Comment