Monday, 5 December 2016

ஆடு அவன் ஆடவன்

ஆடுகொடி இடையாளே
ஆடுமடி நடையாலே
ஆடவர் ஆடிவிழ -இடை
ஆடும்படி நடைபயிலாதே

ஆடும்படி நீ நடந்தாலே
வாடும்படி ஆடவர் கிடந்தாலே-அவர்
தேடும்படி இடையாட நீ நடந்தாலே
பாவமடிகோதையே பாடம்படிபேதையே

ஆடுகொடி இடையால்
ஆடும்படி நீநடந்தால் -மேயும்
ஆடுகொடி என உனை எண்ணி
ஆடு அவன் ஆடவன் மேய்த்துவிடுவான்

மூடுபடை முகம்மூடி
போடும் உடை உடல்மூடி
நாடு கடை நகரென்று
நீ நடக்கையிலே

ஆடுமடி உன் தொடை
ஆடுமடி உன் இடை
ஆடுமடி உன் நடை
ஆடுமடி உன் உடல் எடை

ஆடுமாடு கூட அழகாய் போகுமடி
நடமாடும் போதும் கூட
தடமாறுவது கிடையாதடி
ஆடுமாடு கூட கூடும்போது
ஒதுக்குப்புறம் நாடுமடி

நடுத்தெருவில் படுத்திருக்கும்
அடுத்தவன் நீ உடுத்தியிருக்கும்
உடையில் ஒப்பனையால் உன்னை
நீயே படுத்தியிருக்கும் பாட்டில்
நித்திரை இழந்து நிம்மதியற்று
நிற்கிறான்

அடியே! என் தங்காய்
நீ இறுக்கியுடுத்துவதும்
ஒடுக்கியுடுத்துவதும் பின்
அந்நியன் உன்னை
உரித்தெடுத்ததும்.

ஐயையோ!  என்னை
அந்நிய ஆடவன்
சீண்டிவிட்டான்
தீண்டிவிட்டான்
தூண்டிவிட்டான்

பெண்குலப்பெருமை
பறிபோய்விட்டதே என்று
மண்டியிட்டழுது
எப்பயனுமில்லை

வகை தொகை இன்றி
நகை வகை அணிந்து
வகை வகையாய் நறுமணம்பூசி
சிகைக்கொரு நிறம் உதட்டு
முகைக்கொரு நிறம் பூசி

பத்தகவை கடக்காத
பாலகனை பாவம்
பைத்தியமாய் அலையவிட்டு
வளைந்து நெளிந்து சுழிந்து
குழைந்து நடந்து
பகைதனை வளர்த்துவிட்டு
பாவையவளின் பாலுடலை
பாழுடலாக்கிவிட்டான்

ஐயையோ!  பெண்குலப்
பெருமை பறிபோய்விட்டதோ
பெண்ணென்றால் பேயும்
இரங்கும்
ஆண்பேயன் இரங்கமாட்டானே
விடுதலையுலகில் பெண்
படுகொலையானாள் எங்கே?
பெண்விடுதலை என்பதில்
எப்பயனுமில்லை

ஆடு அவன் ஆடவன்
மேய்ந்திடுவான்
மூடு நீ முகத்தை அல்ல
முழு உடலை

இது ஈழ நாடு மங்கையர்
ஒழுக்கமாய் வாழும் நாடு -
தவறினால் வீழும் நாடு
தவறுகிறது விழுகிறது நாடு

No comments:

Post a Comment