எமை தாங்கும் மரமென
நின்றவரே
எமைத்துறந்து மண்ணினுள்
உரமெனச்சென்றவரே
பரமன் அருளால் வரமெனச்சாற்றும்
நற்றர சுவனம் வென்றவரே
ஈழத்திருத்தரணியிலே -ஆழத்திருந்
தகழ்ந்தெடுத்து
ஞாலத்தவரெலாம் போற்றும் - வறுமைதனை கண்டஞ்சாது
வாழத்துணிந்த நவமணி வணிகர்
நளீம் ஹாஜியார்
அமைத்த ஈழச்சோனகர்
இறையோடு
கூடியும் இறைமையோடு கூடியும்
வாழ
அரண்கொண்டமைத்த அரண்மனை
நளீமியாவை
தாங்க மரமென
நின்றவரே
எமைத்துறந்து மண்ணினுள்
உரமெனசென்றவரே
பரமன் அருளால் நற்றர
சுவனம் வென்றவரே
உம் புகழ் எழுத மை
வழியும் பேனா
உமை எண்ணினால் கண்ணீரால் கண்ணிமை கிழியும் தானா
நீரே தெருவழியாய்
போனா
யாமழைப்போம் அன்பாய்
கபூர் நாநா
பூப்பு முதல் மூப்பு
வரை
நளீமியாவின் காப்பரணாய்
இருந்து
காப்பதிலே காலம்
கழித்து
காலம் சென்ற கபூர்
நாநாவே
இருளடர்ந்த இரா
பொழுதில்
அருளடர்ந்த உம் இரா
தொழுகை
இன்னும் எம்மை எட்டி
தொட்டு
கொண்டேதான் என்றும்
உண்டு
எவருமிலா பொழுதும்
எவனும்
எழுந்து நில்லாமல் விழுந்து
படுக்கும்
குளிரிலும் எழுந்து நின்று
தொழுது
சுஜூதில் நீர் விழுந்து விழுந்து
தொழும்
தொழுகையொருநாளும்
பொய்க்காது
ஈருருளி மிதித்து இருமைல்
கடந்து
அஞ்சலும் நாளிதலும் வாங்கி
வந்து
களைப்பு இருமலோடு நீர்
வந்தமரும்
காட்சியில் உமை எண்ணி
வருந்துவதா?
இல்லை உமை வாழ்த்துவதா?
நாடி வருவோருக்கு என்றும்
நல்லவர்
காரியத்தில் என்றும்
வல்லவர்
தொழுதுகொண்டே தொழில்
செய்யலாம்
என்பதற்காகவே நளீமியா
வந்தவர்
சாயங்காலம் பகலன் சாயுங்
காலம்
பசு மேயுங்கால் ஓயுங்
காலம்
ஒளி தேயுங்காலம் ஈருருளியில்
புறப்பட்டு
போன நீங்கள் ஈருலக
வாழ்வையும்
அனுபவிக்க புறப்பட்டு
விட்டீரே
ஆண்டு எழுபத்து மூன்றில்
வந்தவரே
அகவை எழுபத்துமூன்றிலுலகை
பிரிந்தவரே
உமக்கு ஏழேழு சுவனம் கிட்ட
பிரார்த்திடுவோமே!
No comments:
Post a Comment