Monday, 17 October 2016

யுத்தம்

சித்தமெனது சொல்லு
நித்தமெனது துக்கம் கொல்லு
பித்தம் தலைக்கேறியது போதும் நில்லு
யுத்தம் செய்து வெல்லு

குத்தும் கத்தி கொண்டு செய்தால்
மட்டும் அது யுத்தமல்ல
கொட்டும் தோட்டா சுட்டும் செய்தால் மட்டும் அது யுத்தமல்ல

அடுத்தவன் அவமதித்தவன்
என் நாமம் கெடுத்தவன்
எனக்கே காலக்கெடு கொடுத்தவன்
கர்வமெடுத்தவன்

பெருமை கொழுத்தவன்
பீய்ற்றலில் வலுத்தவன்
என என்னை எதிர்த்தவன்
அத்தனை பேரும்
அதிர்ந்து நிற்க
உதிர்ந்திடாது
உயர்ந்திடுவதே யுத்தம்

No comments:

Post a Comment