அதோ என்ன பெரும் இமையம்
இப்போது ஏற பயம்
நாளை வரும் நல்ல சமயம்
அப்போது கடப்போம் இமையம்
என்று நினைத்து நினைத்தே
இன்றே வாழ்கையும் முடியும்
இன்றே உன் இலட்சியம்
மண்ணில் மடியும்
வாழ்வின் ஒரு நொடியும்
முடியும் என்றால்-கோளை
பயமெல்லாம் ஓடி ஒழியும்
மூடிமடியும் இன்றே உனக்கு
உலகம் புதிதாய் விடியும்
துணிந்துவிட்டால்
துயரங்கள் ஒடியும்
பணிந்துவிட்டால்
பழிப்பெயர்உன்மேல் படியும்
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொன்றும் முடியும் என்று
ஒவ்வொரு அடியும் எடுத்து வையும்
உலகக்குடியும் உன்னடியில் படியும்
நதி தன்னை
நடுக்கடல் அடைய
நாள் முழுதும் நின்று
கொண்டு திட்டமிட்டதில்லை
தடுப்பது தடுக்கும்
நடப்பது நடக்கும்
கிடைப்பது கிடைக்கும் என்று
நகர்ந்து கொண்டே இருக்கும்
நடுவில் பாறை கிடக்கும்
இடையே பாதை மறிக்கும்
தடையாய் அணையே இருந்தால்
அதனையும் நதி முறிக்கும்
தன் இலக்கு அடைய
பீய்ச்சி அடிக்கும்
பாறை பறக்கும்-புது
பாதை பிறக்கும்
தடைக்கல் அகலும் இல்லை
அமிழும் இல்லை இரண்டாய்
பிளக்கும் இல்லை கல் மேல் நதி
எழுந்து நடக்கும்
நதிபோல் நீ நடந்தால்
நீ நினைத்தது நடக்கும்
இமையமே இடையில்
வந்தாலும் இடிந்து கிடக்கும்
No comments:
Post a Comment