Saturday, 29 October 2016

ஆசிரியர் தினக்கவி

தீங்கெலாம் உடைபடு
தீங்கொழிய படைஎடு
தீங்கிலார்க்கு நீ  கொடைகொடு
துணியிலார்கு நல்ல உடைகொடு

தீன்மார்க்க விலங்கெலாம்உடைபடு
என் அழைப்புக்கு நீ விடைகொடு
நல்ல தமிழில் நல்ல கவி நான்
செய்ய இறைவா அருளிடு

செம்மல் நபிக்கும்
செந்நெல் மணிக்கும்
என்றும் நிறம் சிவக்கும்
என் கவிகளில் சலவாத்து பிறக்கும்

முதலில் முன்னிருக்கும் வரிக்கும்
நாம் முப்பொழுதும் நினைக்கும்
எம் ஆசான்களுக்கும்- பின்னர்
பின்னிருக்கும் பெரும் படைக்கும்

இறுதியாய் முழுமொத்த அவைக்கும்
நான் படைக்கும் கவி கிடைக்கும்
என் சலாம்  என்றும் இனிக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்

விண்ணெடு விண்ணுடு நல்ல
விண்ணுடு -அதுபோல் மண்ணொடு
எம் கண்ணொடு இம்மண்ணுடு
அழகு பொன்னுடு இன்குரல்
பண்ணுடு எம் ஆசான்களே

பொற்றினம் இன்று  அதனால்
நித்திலம் அறிவு முத்து இரத்தினம்
ஆசான்கள் பற்றி நாம்
நலமாய்  உரைத்து போற்றிடுவோம்

காலை உதயம் முதல்
மாலை சயனம் வரை
சோலை வனத்திலும்
பாலை வனத்திலும்

சாலை வழியிலும்
நாளை என்ன கற்பிக்க
வேண்டும் என்று
நாள்தோறும் நம்மை
மறக்காத ஆசான்களை -நாம்
மறந்து தொலைக்கிறோம்

நம்மிடம் ஆசான்கள்  வந்து
பிள்ளைகளே
நலவாய் படியுங்கள்
நலமாய் வாழுங்கள்
நாளைய உலகை
ஆளுங்கள்  என்றதும்

இவரென்ன பெரும்
இமையத்தை இடித்தவரோ
இல்லை எவரஸ்டை எட்டிப்பிடித்தவரோ
இல்லை மரியானா ஆழியில்
மூழ்கி முத்தெடுத்தவரோ

தத்துவம் எல்லாம் சொல்வார்
தரவாய் படித்தால் தங்கப்பெட்டி
என்பார் ஆனால் அவருக்கே
தங்கவீடு
இல்லாமல் பேரூந்தில் தொங்கித்திரிகிறார்

முக்கால் முழம் முடி
வளர்ப்பது கூடாது
என எம்மாசான் சொன்னதும்
இவருக்கென்ன

முக்கால் மூளையோ
கற்காலத்தில் பிறந்த இவர்
தற்காலத்து எமக்கு
அறிவுரை சொல்கிறார்

ஒழுக்கம் விழுப்பம் தரலால்
ஒழுக்கம் உயிரினில் ஓம்பப்படும்
என வள்ளுவர் சொன்னதாய்
சொல்வார் இதை ஒழுகி நடந்தால்
வல்லவனாகலாம் என ஆசான் சொன்னதும்

வள்ளுவனுக்கு வந்த கேடு
குறள் எழுதி நாசமாய் போனது அவன்கூடு- உயிரோடு அவன் இன்று இருந்தால் தலையில் கல்லைப்போடு என மனதுக்குள்ளே
பாடும் என் தோழர்கள்.

மூத்தோர் சொல்லும்
முழுநெல்லிக்கனியும்
முன்புளிக்கும் பின்னினிக்கும்
என்பதை அறிவீரோ

நன்னெறியும் அறிவின்
செல்நெறியும் அறிஞர் ஆசான்
பெருமையும் அறிந்திலாதவரே
அறிவீனமாய் கதைப்பர்

அதனால்தான் அ றிவின்
பெருமொயை அறிந்த
அனௌறைய அறிஞர்கள்
கல்வி கற்ற முறை என்ன?
அறிவை பெற்ற முறை என்ன?

என்று ஒரு முறை
இமை மூடி நினைத்தால்
போதும் எம் இதையம்
முழுதும் இரத்தம் வடியும்

குருக்கு குடை பிடித்து
உடை துவைத்து -கடு
நடை தொடர்ந்து நடந்து வந்து
தரையில் அமர்ந்து கற்பது
கற்காலம் முற்காலம்
அறிவின் பொற்காலம்

ஆனால் தற்காலம்
சீடனை தேடிப்பிடித்து
அவனிற்கு வெற்றிலை மடித்து
மெல்லக்கை பிடித்து வெள்ளை
விரித்து கதிரையில் அமர்த்தி
ஆசான் கற்பிக்க வேண்டும்.

இக்கல்விக்கு பெயர் மாணவர்
                  மயம்
இதில் இல்லை    ஏதும்
                நயம்
இதனால் ஆசானே மாணவருக்கு
                   பயம்
இதில் இல்லை  ஒரு    நாளும்
                   நிஜம்

கவனிப்பாரற்று கிடந்த
கற்ளை எடுத்து செதுக்கி
சிற்பமாக்கிய பிறகு சிற்பத்தை
மதிப்பர் சிற்பியை மறப்பர்

புதைந்து கிடந்த முத்தை
எடுத்துப்பட்டை தீட்டியபின்
முத்தைமதிப்பர் -பட்டை தீட்டியவரை மறப்பர்

எட்டாத உயரம் ஏறும் வரை
ஏறிவிட்டு  ஏறிய பின்
ஏறிய ஏணியை
எட்டி உதைப்பர்

மறக்கப்டும் சிற்பியாகவும்
மறக்கப்படும் பட்டை தீட்டுபவராகவும்
எட்டி உதைக்கப்படும் ஏணியாகவும்
கற்றபிறகு எம்மாசான்களை மறவாமல்

நெஞ்சு நிமிர்ந்து-எமை
நடக்க வைத்த
ஆசான்களை நெஞ்சத்தில்
நிமிர்த்தி வைப்பொம்

உப்பிட்வரை
உள்ளளவும் நினைப்போம்
அறிவிட்ட ஆசான்களுக்காய்
எம் ஆயுள் முழுதும் பிரார்திப்போம்

No comments:

Post a Comment