Thursday, 7 July 2016

புகை பகை

சற்று நகையுங்கள் என்றால்
புகைக்கிறார்கள்.
ஏன் புகைக்கிறீர்கள் என்றால்
பகைக்கிறார்கள்.
ஏன் பகைக்கிறீர்கள் என்றால்
நகைக்கிறார்கள்.
ஏன் நகைக்கிறீர்கள் என்றால் மீள
புகைக்கிறார்கள்.

புகை எமக்கு பகை
நகை பிணக்கின் பகை-ஆதலால்
நகைப்பதை எடுத்து
புகைப்பதை விடுத்து
வாழ்வைசுவைப்போம்

நகை-புன்னகை

#புகை
#பகை
#நகை

No comments:

Post a Comment