பசுஞ்சோலை புல்தரை
நெடுஞ்சாலை மக்கள் படை
பூஞ்சோலை பறவைப்படை
அதிகாலை அழகிய வேளை
அந்தி மாலை அழகாய்
எரியும் சூரியச்சுவாலை
இது அவ்வளவும்
கூடிவரப்பெற்று
கோடிமக்கள்
கூடிநின்று தக்பீர் சொன்னால்
கொண்டாடுவோம்
ஆயினும் அதுதான் இல்லையே
சிரியாவில்
சிரித்து விளையாடும்
சிறார்களெல்லாம்
சீறிப்பாயும் தீக்கணையில்
சிதறிக்கிடக்கையிலே
நானெப்படி பெருநாள்
கொண்டாட முடியும்
ஆடை கறுப்பு
காட்டுவது வெறுப்பு
கொட்டுவது நெருப்பு
எடுத்தடிப்போம் அவர்களுக்கு செருப்பு
சகலதிற்கும் ஐ.எஸ்தான் பொறுப்பு
யாரிவர்களுக்கு கொடுப்பது மறுப்பு
பர்மாவிலே
தம்பியும் தங்கையும்
வெம்பி எரியும் பொழுதும்
விம்மி அழும்பொழுதும்
மம்மி போல் மரித்துக்கிடந்துவிட்டு
மறுநாள் நானெப்படி
பெருநாள் கொண்டாடமுடியும்
மச்சியும் மாமியும்
மண்டை துளைத்து
மச்சம் வெளிவந்து
மயங்கிக்கிடக்கையிலே
நானெப்படி கொண்டாட முடியும்
பெரியப்பாவும் பெரியம்மாவும்
பெருங்கிடங்கில் பெற்றோல்
கொண்டு தீயில் துவண்டு கிடக்கையிலே-அதனை கண்டும்
காணாது உலகே நடக்கையிலே
நானெப்படிக்கொண்டாட முடியும்
பாலஸ்தீனிலே
கூப்பிட்டு வைத்த மரணம்
குவிந்து கிடக்கிறது தோட்டா படலம்
நாதியற்று நாறுகிறது நம்மவர் சடலம்
நம் நெஞ்சில்இல்லை ஒரு துளி சலனம்
இப்படியிருக்க நானெப்படி கொண்டாட முடியும்
நாமெல்லாம் எழிலில் எழுந்து நிற்கும் அறேபியாவின் சுவைமிகு பேரீச்சங்கனியும் வைத்து -இல்லாத உணவெல்லாம் வைத்து இப்தார் திறக்கையிலே
அக்ஸாவிலே
தோட்டாவும் துப்பாக்கியும்
கல்லும் கவனும்
கையில் வைத்து இப்தார் திறக்கையிலே நானெப்படி கொண்டாட முடியும்
இந்தியாவிலே
வெட்டிக்கூறு போடு இவர்களை என
கொட்டிமுழக்கும் பறையில்
தட்டிச்சொல்கிறான்
தரங்கெட்டவன்
தட்டிக்கேற்க திராணி இன்றி
நானெப்படி கொண்டாட முடியும்
அகிலம் எங்கும் ஆளவந்து
கருணை என்ன வென சொல்லித்தந்து
சுவனத்திற்கு வழி சொல்லித்தந்த
அண்ணல் நபியின் மண்ணறையில்
குண்டுவெடிக்கையிலே நானெப்படி கொண்டாட முடியும்
வையகம் எங்கும்
சுகம் மங்க
பகை தங்க
நரகத்தீ பொங்குதே
ஆளுக்கொரு கை
அள்ளிக்கொடுப்போமா இரத்தம்
அப்பொழுதும்அடங்காதோ
இவ்யுத்தம்
நித்தம் யுத்தம்
ரத்தம் சத்தம்
இவ்வத்தனையும் துடைத்தெறிந்துவிட்டு
யுத்தமிலா புத்தம்புது உலகு படைத்துவிட்டு பின்னர்
புத்தாடை புனைந்து கொண்டாடினால்
நானும் கொண்டாடுவேன்
No comments:
Post a Comment